சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் குறிப்பாக ராகவா லாரன்ஸ், விஷால், சந்தானம், சரத்குமார் உள்பட பலர் உணவு, உடை, பெட்ஷீட், மற்றும் அத்தியாவசிய தேவைகளை கொடுத்து வந்தனர்.
இந்த வரிசையில் தற்போது விஜய் ரசிகர்களும் இணைந்துள்ளனர். தாம்பரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அன்னதானம் வழங்கினர்.
விஜய் ரசிகர்கள் கொடுத்த உணவுப்பொருளை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வாங்கி சென்றனர்.
Add Comment