IPL
IPL
Entertainment Flash Sports Tamil

இன்று முதல் இந்திய இரவுகளில் ஐபிஎல் வெளிச்சம்!

உலகக் கோப்பை முடிந்து விட்டது. ஆனால், இன்னும் 47 நாள்களுக்கு இந்திய இரவுகளை பிரகாசிக்கச் செய்யும் ஐபிஎல் தொடர் தொடங்கி விட்டது. கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெறவுள்ள எட்டாவது ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தாவும், மும்பையும் மோதவுள்ளன.

டி-20 ஆட்டம் ஆதிக்கம் செலுத்தும் இந்த சூழலில் 50 ஓவர் ஆட்டத்துக்கு கிராக்கி இருக்குமா என்ற சந்தேகமே எழாத வகையில், சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் நடந்த உலகக் கோப்பைத் தொடர் வெற்றி பெற்றது. மாற்றி அமைக்கப்பட்ட

ஃபீல்டிங் விதிமுறைகள், பேட்ஸ்மேன்களின் புதுவிதமான ஷாட்கள் என 50 ஓவர் உலகக் கோப்பை மெருகேறி வருகிறது.

ஆனால், பணம் கொழிக்கும், கிரிக்கெட் உலகில் பெரிதாகப் பேசப்படும் ஐபிஎல் தொடரில் புதுமைகள் இல்லை என்பது நிபுணர்கள் கருத்து. பெரும்பாலான நிறுவனங்கள் ஸ்பான்சர் உரிமத்தைத் திரும்பப் பெற்று விட்டன, ஆண்டுக்கு ஆண்டு நிதி விவகாரங்களில் பின்னடைவு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், எப்போதோ தொடங்கிய இங்கிலீஷ் பிரீமியர் லீக், லா லிகா போன்ற கால்பந்து தொடர்கள் ஆண்டுக்கு ஆண்டு தனது ரசிகர் வட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டே இருக்கின்றன. காரணம், ஒவ்வோர் ஆண்டும் ஏதாவதொரு புதுமைகளைப் புகுத்தி வருகிறது. ஆனால், 2008-இல் இருந்து 2014 வரை ஐபிஎல் தொடர் பேட்ஸ்மேன்களுக்கான ஆட்டமாக இருந்து வருகிறது. ஐசிசி ஃபீல்டிங் விதிகளில் மாற்றம் செய்ததுபோல, பந்துவீச்சாளர்களும் முக்கியத்துவம் பெறும் வகையில் சில விதிகளை ஐபிஎல் ஏற்பாட்டாளர்கள் மாற்றிப் பார்க்கலாம் என்பது ஒரு தரப்பினர் வாதம்.

ஒரு சில குறைகள் இருந்தாலும், கடந்த வாரம் வரை எதிரெதிர் துருவங்களில் மோதிக் கொண்டிருந்த வீரர்கள் இன்று ஒரே ஓய்வு அறையைப் பகிர்ந்து கொள்வது, ரிக்கி பாண்டிங்கின் பயிற்சி, திராவிட்டின் ஆலோசனை என ஜாம்பவான்கள் ஏதோ ஒரு விதத்தில் கிரிக்கெட்டுக்காக ஒருங்கிணைந்திருப்பதும் நல்ல விஷயமே.