Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

தல வழி எப்பவுமே தனி வழி தான்- வாழு வாழ விடு

Advertisements

தன்னை அவமானப்படுத்தியவர்களையும் மன்னிக்கும் குணம் கொண்டவர் அஜித். ஒரு காலத்தில் தனக்கு எதிராக செயல்பட்ட ஏ.எம்.ரத்னத்துக்கு ஆரம்பம் தொடங்கி தற்போது நடித்து வரும் படம் வரை அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்தார் அஜித்.

வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்து நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்திக்காக ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் அஜித்.

அதாவது, அஜித்தின் 57-ஆவது படமாக உருவாகவிருக்கும் படத்தை அஜித் நடித்த பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்க உள்ளதாகவும் தகவல் அடிபடுகிறது.

அஜித்தை வைத்து ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், வரலாறு என ஒன்பது படங்களை தயாரித்த எஸ்.எஸ். சக்ரவர்த்தி சில வருடங்களுக்கு முன்பு அஜித்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருந்தார்.

அஜித்தைவிட்டு பிரிந்த பிறகு சக்ரவர்த்தி தயாரித்த படங்கள் வியாபார ரீதியாக வெற்றிபெறவில்லை. சிம்பு, ஹன்சிகா ஜோடியாக நடித்துள்ள வாலு படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான்!  பலமுறை தேதிகள் அறிவிக்கப்பட்டும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது வாலு படம்.

நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தியின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை அறிந்து அவரை கூப்பிட்டு கால்ஷீட் கொடுத்துள்ளாராம் அஜித். அஜித், விஷ்ணுவர்தன், சக்ரவர்த்தி இணையும் படம் குறித்து தற்போது அதிகாரபூர்வ தகவல் இல்லை.

Exit mobile version