Cinema Entertainment Tamil

20ம் தேதி முதல் தல ஆட்டம் ஆரம்பம் !!!!!

‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 20ம் தேதி முதல் ஆரம்பமாக உள்ளதாம். இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக ஸ்ருதிஹாசன் முதன் முறையாக நடிக்கிறார்.

கடந்த வாரம்தான் இப்படத்தின் பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது. வழக்கம் போல அஜித் பூஜையில் கலந்து கொள்ளவில்லை. தன் படம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் அஜித் இன்னும் கலந்து கொள்ளாமல் இருப்பது அவருடைய ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவே உள்ளது.

படங்களில் பார்ப்பதைத் தவிர அஜித்தை வேறு எந்த ஒரு நிகழ்விலும் பார்க்க முடியாத வருத்தத்தில் அவர்கள் இருக்கிறார்கள். ‘வீரம்’ படத்திற்குப் பிறகு சிவா – அஜித் கூட்டணி மீண்டும் இணையும் இந்தப் புதிய படத்திற்கு வழக்கம்  போலவே தலைப்பு வைக்காமல் இருக்கிறார்கள்.

‘தல 56’ என்றுதான் அந்தப் படத்தை அஜித் ரசிகர்களும் குறிப்பிட்டு வருகிறார்கள். “ஆரம்பம், வீரம், என்னை அறிந்தால்” ஆகிய படங்களின் தலைப்புகளும் அந்தப் படங்களின் படப்பிடிப்பு ஆரம்பமான பிறகுதான் அறிவிக்கப்பட்டது.

அதே போல்தான் இந்தப் படத்திற்கும் தலைப்பு அறிவிக்கப்படலாம் என்கிறார்கள். இதனிடையே இந்தப் படத்திற்காக  ஐந்து பாடல்களுக்கு அனிருத் டியூன் போட்டு முடித்து விட்டார் என்றும் சொல்கிறார்கள். அஜித்துடன் முதல் படம் என்பதால் அனிருத் தனி கவனத்துடன் பாடல் பதிவை நடத்த உள்ளாராம்.