பெங்களூருவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டி.கே. ரவி மர்ம மரணம் தொடர்பான உண்மை சிபிஐ விசாரணை மூலம் வெளிவரும் என அந்த வழக்கில் வாக்குமூலம் அளித்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூரி முதல்முறையாக தனது கருத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி டி.கே.ரவி கடந்த மாதம் 16-ம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்த மரணத்துக்கு மணல் மாஃபியாக்கள்தான் காரணம் என ஒரு தரப்பினரும், பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூரி மீதான ஒருதலை காதல்தான் காரணம் என மற்றொரு தரப்பினரும் கூறினர். இதனிடையே ரோஹினி சிந்தூரி தானாக முன்வந்து சிஐடி போலீ ஸாரிடம் வாக்குமூலம் அளித்தார்.
ரோஹினி சிந்தூரியின் வாக்கு மூலம் ஊடகங்களில் வெளி யானதால் எதிர்க்கட்சிகள் கர்நாடக அரசைக் கண்டித்து போராட் டத்தில் ஈடுபட்டன. எனவே இவ்வழக்கு சிபிஐ விசார ணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரவி வழக்கை சிபிஐ போலீஸார் இந்த வாரத்தில் விசாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐஏஎஸ் ரவியின் மரணத்துக்கு காரணமாக கூறப்பட்ட பெண் ஐஏஎஸ் அதி காரி ரோஹினி சிந்தூரி முதல் முறையாக ரவியின் மரணம் பற்றி தனது ஃபேஸ்புக்கில் கருத்து தெரி வித்துள்ளார். அதாவது ரவியின் மரணம் தொடர்பான பத்திரிக்கை செய்தியை பகிர்ந்து, இது குறித்து பலரும் பல வகையான தவறான தகவல்களை பரப்பினர்.
உண்மை பாதி, பொய் பாதி என செய்தி வெளியிட்டனர். மிக வும் சோகமும் துரதிஷ்டமும் நிரம் பிய நாட்கள் அவை. சட்டமும், அரசு நிர்வாகமும் பணித்த பணியை அவரவர் செய்திருக்கலாம். இப் போதும் காலம் கடந்து விடவில்லை என நினைக்கிறேன். சிபிஐ விசா ரணை மூலம் இந்த சம்பவத்தில் ஒளிந்திருக்கும் உண்மை வெளி வரும்” என குறிப்பிட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி ரவியின் மரணம் குறித்து ரோஹினி சிந்தூரி கருத்து தெரிவித்திருப்பதால் சிபிஐ போலீஸார் அவரிடம் கூடிய விரைவில் விசாரணை நடத்து வார்கள் என தகவல் வெளியாகி யுள்ளது.