Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

தீபாவளியை தமிழில் காெண்டாடிய அனுஷ்கா!

Advertisements

நடிகை அனுஷ்கா, ரசிகர்களுக்கு தமிழில் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்து அசத்தி உள்ளார்.

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று (செவ்வாய்க்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ், தெலுங்கு படஉலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை அனுஷ்கா, தனது பேஸ்புக் பதிவில், ரசிகர்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்து அசத்திஉள்ளார். தனது பேஸ்புக் பதிவில், “தீபங்கள் ஜொலிக்க, பட்டாசு வெடிக்க, புது துணி உடுத்தி, மகிழ்ச்சியுடன் இந்நாளை நீங்கள் கொண்டாட, என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.” என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஆர்யா-அனுஷ்கா ஜோடியாக நடித்து விரைவில் திரைக்கு வர இருக்கும் படமான ‘இஞ்சி இடுப்பழகி’யின் புகைப்படத்துடன் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டு உள்ளார்.

தமிழில் வாழ்த்து தெரிவித்த அனுஷ்காவிற்கு ரசிகர்கள் பாராட்டுக்களை தெரிவித்து உள்ளனர். அனுஷ்காவின் இந்த பதிவிற்கு இதுவரையில் 133,404 பேர் லைக் செய்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பகிர்ந்துக் கொண்டு உள்ளனர்.

Exit mobile version