தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் இளைய தளபதி விஜய். விஜய்யின் வெற்றியிலும், தோல்வியிலும் அவருக்கு பக்கபலமாக இருந்த ரசிகர்கள் இன்று மீண்டும் அவர்கள் யார் என்பதை நிரூபித்துள்ளனர்.
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முதலாக 50 கோடி கிளப் என்ற சாதனையை உருவாகிய படம் ‘கில்லி’. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான இப்படம் ஏ,பி,சி என அனைத்து சென்ட்களும் பெரும் சாதனைகள் படைத்தது.
இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆனதை கொண்ட்டாடும் விதமாக சமூகவலை தளங்களில் #11YearsOfGHILLI என்று டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.