Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

உடல் எடையை குறைக்க வேண்டுமானால்..

Advertisements

ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் சாதத்தை உட்கொள்வது நல்லது. அளவுக்கு அதிகமாக சாதத்தை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். வெள்ளை சாதத்தை தினமும் அதிகம் சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

எனவே சாதம் சாப்பிட ஆசைப்பட்டால், கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்தை சாப்பிடுங்கள். கைக்குத்தல் அரிசியுடன் ஒப்பிடுகையில் வெள்ளை சாதத்தில் ஊட்டச்சத்துக்களானது மிகவும் குறைவாக உள்ளதால், இதனை அதிகம் எடுத்துக் கொள்வதால் எவ்வித சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்போவதில்லை.

உடல் எடையை குறைக்க வேண்டுமானால், குறைந்தது ஒரு மாதத்திற்கு வெள்ளை சாதத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில் வெள்ளை சாதத்தில் அளவுக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளதால், உடலின் எடையானது இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும்.

கைக்குத்தல் அரிசியுடன் ஒப்பிடும் போது, வெள்ளை சாதத்தை சாப்பிடாமல் இருந்தால், தொப்பை வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அவை பசி உணர்வை அடிக்கடி ஏற்படுத்தும்.

Exit mobile version