ஊறுகாயை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
பலருக்கும் ஊறுகாய் இல்லாமல் உணவு சாப்பிடுவது என்பது கடினமான விடயமாக இருக்கும். அனைவராலும் ருசித்து சாப்பிடப்படும் இந்த ஊறுகாய் உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
இரத்த அழுத்தம்
உணவோடு அதிகமாக ஊறுகாயை சேர்த்து சாப்பிடும் போதும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். பொதுவாக இரத்த கொதிப்பு உள்ளவர்களில் சிலர் இதை உணர்ந்திருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.
சிறுநீரக குறைபாடு
ஊறுகாயை அதிகம் சேர்த்துக் கொள்வதனால், சிறுநீரகத்தின் வேலை பளு அதிகமாகிறது. இதனால் சிறுநீரகத்தின் செயல்திறனில் குறைபாடு ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது.
புற்றுநோய்
ஊறுகாயின் சுவைக்காகவும், பதப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்க கூடியவை.
புற்றுநோயால் இறந்தவர்களில் 90% க்கும் மேலானவர்கள் தொடர்ச்சியாக அதிகம் ஊறுகாய் சாப்பிட்டு வந்தவர்கள் என்று ஓர் ஆய்வில் கூறப்பட்டிருக்கிறது.
வயிற்றுப்புண்
அதிகமாக ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு முதல் பக்கவிளைவாக வயிற்று புண் ஏற்படும். இந்த வயிற்று புண் நாளடைவில் புற்றுநோயாக மாற வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
குமட்டல்
அதிகமாக உணவு சாப்பிட்ட பின்னர் பலருக்கும் குமட்டல் போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். ஆனால், இதற்கு ஊறுகாய் தான் காரணம் என்று தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை.
அதிகமாக சாப்பாட்டோடு சேர்த்து ஊறுகாயும் சாப்பிடும் போது குமட்டல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
மன அழுத்தம்
ஊறுகாயை அளவிற்கு அதிகமாய் சாப்பிடுபவர்களுக்கு கோபம் காரணத்தினால் ஏற்படும் மன அழுத்தம் அதிகமாய் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தொற்று நோய்
ஊறுகாய் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மற்றவர்களை விட எளிதாக நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
செரிமான பிரச்சனை
ஊறுகாயை அதிகமாக சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
ஊறுகாய் மட்டுமல்ல, எந்த ஒரு உணவையும் அளவிற்கு மீறி அதிகமாக உட்கொண்டால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.