Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

எடையைக் குறைக்குமா கீரீன் டீ ?

Advertisements

இன்று க்ரீன் டீயை பலரும் நாட ஆரம்பித்திருக்கும் நிலையில், க்ரீன் டீயை யாரெல்லாம் குடிக்கலாம், இதைக் குடிப்பதனால் உடல் எடை குறையுமா, குடிக்கும் முறை என்ன என்பது பற்றி பார்ப்போம்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கிய, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவல்ல, குறைந்த கலோரிகளே கொண்ட க்ரீன் டீயை, எந்த வயதினரும் அருந்தலாம்.

குறிப்பாக, ஒபிஸிட்டி அதாவது அதிக எடை உள்ளவர்கள், அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு க்ரீன் டீ தொடர்ந்து குடிக்கப் பரிந்துரைக்கத்தக்கது.

ஒரு நாளில் மூன்று கப் வரை க்ரீன் டீ அருந்தலாம்.

அசிடிட்டியை உண்டு பண்ணும் என்பதால், இதை வெறும் வயிற்றில் அருந்த வேண்டாம். காலை 11 மணி, மாலை 5 மணி போன்ற உணவு இடைவெளிகளில் சாப்பிடலாம்.

க்ரீன் டீயில் பால், சர்க்கரை கலந்து சாப்பிடக் கூடாது, அது டீயின் தன்மையை மாற்றிவிடும்.

வைட்டமின்-சி, தாது உப்புகள் இருக்கும் இந்தக் டீயை கொதிக்க வைத்தால் அந்தச் சத்துகள் வெளியேறும்விடும் என்பதால், கொதிக்க வைத்த தண்ணீரில் தேயிலைத் தூளையோ, பையையோ (டீ பேக்) போட்டு, மூடி வைத்து, சாறு இறங்கியதும் பருகலாம்.

வைட்டமின்-சி வேண்டுகிறவர்கள், அதனுடன் சிறிதளவு எலுமிச்சை சேர்த்தும் பருகலாம்.

மொத்தத்தில், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் எடையைக் குறைக்க விரும்பு கிறவர்களுக்கான நல்ல பரிந்துரை,

க்ரீன் டீ. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய தாகத்தை குறைக்கும் வல்லமை படைத்தது!

Exit mobile version