HealthTips Tamil

டயட் மூலம் உடலில் சேர்ந்துவிட்ட நச்சுக்களை வெளியேற்றலாம்!

ஒரு வார காலம் குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்டு, உடலில் சேர்ந்துவிட்ட அதிகப்படியான நச்சுக்களை நீக்கலாம். இந்த டயட்டில் முக்கியமாக அரிசி,கோதுமை, அசைவ உணவுகள், பால் பொருட்கள், உப்பு, சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு உணவுகள், ஆல்கஹால், வறுத்த உணவுகள் போன்றவற்றை உண்ணக்கூடாது. இனி எதையெல்லாம் சாப்பிடலாம் என்று பார்ப்போம்.
எவ்வளவு காய்கறிகள், பழங்கள் சாப்பிடத் தோன்றுகிறதோ அவ்வளவும் சாப்பிடுங்கள்

எவ்வளவு காய்கறிகள், பழங்கள் சாப்பிடத் தோன்றுகிறதோ அவ்வளவும் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிடும் பழங்களின் பட்டியலில் எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்கள், சிவப்பு திராட்சை, தக்காளி, தர்பூசிணி, கிவி பழங்கள் காய்கறிகளில் வெள்ளரிக்காய், பசலைக் கீரை போன்றவற்றை அதிகம் சேருங்கள்.
ஒருநாள் விட்டு ஒரு நாள் மட்டும் வாழைப் பழத்தையும் உருளைக் கிழங்கையும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
காய்கறிகளுடன் சிவப்பு அரிசி,சோளம்,உப்பு காரம் சேர்க்காத கொட்டை வகைகளை உண்ணுங்கள்.
அரை லிட்டர் பழச்சாறு அல்லது காய்கறி சாறுடன் சிறிதளவு துருவிய இஞ்சியை சேர்த்து அருந்துங்கள்.
நச்சுக்களை முறிக்கும் ஆற்றலுடைய சத்துக்களை நாம் அதிக அளவில் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் பி2, பி3, பி6, பி12,ஃபோலிக் ஆசிட், ஆண்டி ஆக்ஸிடெண்ட் வைட்டமின்களான ஏ,சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டீன் உள்ளவையான நீங்கள் உண்ணும் உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு லிட்டர் (10 தம்ளர்) நீரை அருந்துங்கள். கூடவே ஹெர்பல் டீ எடுத்துக்கொள்வது சிறந்த பலனைத் தரும்.
ஒரு நாளில் 15 நிமிடங்களாவது நடைப்பயிற்சி செய்யுங்கள்.
வருடத்தில் ஒருமுறை ஒரு வாரம் முழுக்க மேலே சொன்ன உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டால் உடலிலுள்ள நச்சுக்களை நீக்கலாம்.
வருடத்தில் ஒருமுறை என்பதைக் காட்டிலும் வாரம் ஒரு நாள் உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் உடலில் நச்சுக்கள் சேர்வதை ஆரம்பத்திலேயே தவிர்க்கலாம்.அதையும் பார்ப்போம்

உணவுக்கட்டுப்பாடு இருக்கும் நாளன்று எழுந்ததும் 4 தம்ளர் நீர் அருந்துங்கள்.
காலையில் டிபனுக்கு பழங்களை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். கூடவே ஒரு கப் ஹெர்பல் டீ எடுத்துக்கொள்ளுங்கள்.
காலை 11 மணியளவில் இளநீர் அருந்தலாம்.
மதிய உணவுக்கு இரண்டு மேஜைக்கரண்டி முளைகட்டிய பயிறு கலந்த சாலட் உண்ணுங்கள்.
மாலை கைப்பிடியளவு முந்திரி, பாதாம் போன்ற உலர் கொட்டை வகைகளுடன் ஹெர்பல் டீயை குடியுங்கள்.
இரவு உணவுக்கு வேகவைத்த காய்கறிகளுடன் சிட்டிகையளவு உப்பு சேர்த்து உண்ணுங்கள்