இன்றைய இளைய சமுதாயத்தை கவரும் விதத்திலும் அவர்களை ஊக்குவிக்கும் விதத்திலும் ஆங்காங்கே, பல வித விருது வழங்கும் விழா நடைபெறுகிறது.இந்த விருது வழங்கும் விழாவில் முன்னணி நட்சத்திரங்களின் வாக்கு எண்ணிக்கை மிக பிரபலம்.
சமீபத்தில் ஒரு பிரபல செய்தி தொலைக்காட்சி தமிழக ரசிகர்களிடையே ஒரு வாக்கு எண்ணிக்கை நடத்தியது.அதாவது தமிழ் சினிமாவில் டபுள் ஆக்க்ஷன் ரோலில் உங்களை கவர்ந்தவர் யார்? என்று கேட்கப்பட்டது.
அதில் விஜய் 5225 வாக்குகள் பெற்று முதலிடம் பெற்றிருக்கிறாராம். அடுத்ததாக அஜித் 5103 வாக்குகளில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இதில் ஒரு குறிப்பிட தக்க விஷயம் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்தது இரண்டே படங்கள் தான்.