சென்னை: உலர் திராட்சையில் நிறைந்துள்ள ஏராளமான மருத்துவ பயன்கள் குறித்து இங்கே காணலாம்.
உலர் திராட்சையில் வைட்டமின் பி, சி, ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரு டம்ளர் நீரில் 10 உலர் திராட்சைகளை ஊற வைத்து, மறுநாள் காலையில் நீருடன் சேர்த்து உண்டால் சிறுநீரக தொற்று நோய்கள் குணமாகும். அதே உலர் திராட்சைகளை நீரில் கொதிக்க வைத்து, அருந்தினால் குடல் புண்கள் குணமாகும். உடல் வெப்பம் தணிவதற்கும் உலர் திராட்சை பெரிதும் பயன்படுகிறது. பாலில் உலர் திராட்சைகளை இட்டு, காய்ச்சி குடித்தால் இதயத் துடிப்பு சீராகும்.
உலர் திராட்சையை கொதிக்க வைத்து, மசித்து தேன் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகும். சுகமான தூக்கத்திற்கு பாலில் உலர் திராட்சைகளை இட்டு, காய்ச்சி வடிகட்டிய பாலை அருந்தினால் போதும். உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்த சோகை நோய் குணமாக, உலர் திராட்சைகள் உதவுகின்றன. ஆண்கள் விறைப்புத் தன்மை குறைப்பாட்டில் அவதிப்பட்டால், நாள்தோறும் உலர் திராட்சைகளை ஒரு கையளவு உட்கொள்ள வேண்டும். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு தீர்வாகவும் இருக்கின்றன. எலும்புகளின் வலிமைக்கு தேவையான கால்சியம் உலர் திராட்சை அதிகம் உள்ளது.