புதுடெல்லி: டெல்லியில் உள்ள ஹியூமன் பிஹேவியர் மற்றும் அலைய்டு சயின்சஸ் (IHBAS) நிறுவனத்தின் தீவிர சிகிச்சை பிரிவில் 3 நோயாளிகளை பார்த்துக்கொண்டிருந்தார் மனநல மருத்துவர். இவர்களில் ரஜானி என்ற ஒரு பெண்ணும் உள்ளார். 33 வயதுடைய அவர், 18 வருடங்களுக்கு முன்பு மரணமடைந்த அவரது அம்மாவின் தற்கொலைக்கு பின் 3 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அவரின் தந்தையான ஹரி ஓம் திவாரி, எனது மகள் அவளின் அம்மா நினைவு வரும்போதெல்லாம் தாங்கமாட்டாமல் அழுதுவிடுவார். மற்றும் எனக்கு விஷம் வாங்கிக் கொடுங்கள் நான் என் அம்மா, பாட்டியிடம் செல்ல வேண்டும் என்றும் கூறுவார்.
அதேபோல் சமூக ஆர்வலரான கம்லா பாசின், எனது மகள் மீடோ, PhD படித்துக்கொண்டிருக்கும் போதே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் அவள், 27 வயதில் தற்கொலை செய்து கொண்டார். அவள் ஆலோசகரை பார்க்க தயாராகத் தான் இருந்தால், ஆனால் மருந்துகளை ஏற்க எதிர்ப்புகள் நிலவி இருந்தது. மீடோவை போல மனஅழுத்தத்திற்கு சிகிச்சை அளிக்காமல் இருப்பதால் உலகம் முழுவதிலும் ஒவ்வொரு வருடமும் 7 லட்சம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
தேசிய குற்றப் பதிவுகள் கழகத்தின் கணக்கீடுகளின் படி, 2015 ஆம் ஆண்டில் 1,33,623 பேர் தற்கொலை செய்துகொண்டார் என்று குறிப்பிட்டுள்ளது. காசநோய், மலேரியா மற்றும் டெங்கை விட தற்கொலையால் அதிக மக்கள் உயிரிழக்கின்றனர். நோயாளிகள் மன அழுத்தம் அறிகுறிகளை முதலில் தெரிந்த உடனே குறைந்தது 10 ஆண்டுகளாவது தொடர்ச்சியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிகிச்சை எடுக்க தவறினால், அது இயலாமை மற்றும் தற்கொலையில் கொண்டு போய் நிறுத்திவிடும்.
உளவியலாளர்கள், ஒவ்வொரு சர்ந்தர்ப்பத்திலும் தற்கொலையை தடுக்க முடியும் என்று கூறுகின்றனர். ஆனால் 98 முதல் 99 சதவீதம் தற்கொலைகளை நடைமுறை பழக்கத்தால் மட்டுமே தடுக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.