உலகம் முழுவதும் புகை பிடிப்பது தொடர்பான ஆய்வொன்று சமீபத்தில் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டது.
உலகளவில் நடைபெறும் மொத்த மரணங்களில் 11% மரணங்கள் புகை பிடிக்கும் பழக்கம் காரணமாகவே நடைபெறுகின்றன. புகை பிடித்தல் காரணமாக அதிகம் உயிரிழப்போர் நாடுகள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இதில் சீனா முதலிடத்தையும், இந்தியா 2-வது இடத்தையும் பிடித்துள்ளது. அமெரிக்கா, ரஷியா ஆகிய இரு நாடுகளும் 3 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்துள்ளன. சீனா, இந்தியா, இந்தோனேசியா நாடுகளில் ஆண்கள் அதிகம் புகை பிடிக்கின்றனர். உலகம் முழுவதும் உள்ள மொத்த புகை பிடிப்போரில் 11.2% பேர் இந்தியாவில் இருக்கின்றனர்.
இதேபோல, அதிகம் புகைபிடிக்கும் பெண்கள் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தையும், சீனா 2-வது இடத்தையும் இந்தியா 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
உலகம் முழுவதும் நடைபெறும் மரணங்களில் 10-ல் 1 மரணத்திற்கு புகைபிடிக்கும் பழக்கம் காரணமாக உள்ளது. உலகம் முழுவதுமுள்ள மொத்த புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களில் 50 சதவிகிதம் பேர் சீனா, இந்தியா, அமெரிக்கா, ரஷியா நாடுகளில் வசித்து வருகின்றனர்.
1990 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில் புகை பிடிக்கும் பழக்கம் அதிகம் உள்ள 195 நாடுகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் உயிரிழப்பு மற்றும் மந்தத்தன்மைக்கு புகை பிடிக்கும் பழக்கமே முக்கியக் காரணமென்று தெரிய வந்துள்ளது.