HealthTips

சர்க்கரை நோயை குணப்படுத்தும் சென்சார்கள்: ஆப்பிள் தயாரிக்க முடிவு?

சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் கனவு திட்டம் ஒன்றை ஆப்பிள் நிறுவனம் துவங்கியுள்ளது. இதற்கென பயோமெடிக்கல் துறையை சேர்ந்த பொறியாளர் குழு ஒன்றை ஆப்பிள் உருவாக்கியுள்ளது. இந்த குழுவினர் சர்க்கரை நோயை குணப்படுத்தும் சென்சார்களை உருவாக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும், இது குறித்து பதில் அளிக்க ஆப்பிள் மறுத்து விட்டது. புதிய பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் பாலோ ஆல்டோவில் உள்ள நான்டீஸ்க்ரிப்ட் அலுவலகத்தில் பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயிரியல், மென்பொருள் மற்றும் வன்பொருள் உள்ளிட்டவற்றை பயோ-எலெக்ட்ரானிக்ஸ் முறையில் நோய்களை குணப்படுத்த பல்வேறு நிறுவனங்களும் பணியாற்றி வரும் நிலையில் புதிய சந்தையில் ஆப்பிள் நிறுவனமும் களமிறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு கிளாக்சோஸ்மித்கிளைன் மற்றும் ஆல்ஃபாபெட் இன்க் புதிய நிறுவனம் ஒன்றை அறிமுகம் செய்தன. இந்த நிறுவனம் பயோ-எலெக்ட்ரிக் சாதனங்களை மனிதர்களின் நரம்புகளில் புகுத்தி பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களும் பயோ-எலெக்டிரானிக்ஸ் நன்மைகளை விளக்கி, இவற்றின் பயன்பாடு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. மற்ற நிறுவனங்களைத் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனத்தின் பயோ எலெக்ட்ரிக் சாதனம் சார்ந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.