Indians Tamil

மீண்டும் சிவாஜி சார் !!!!!!

விளம்பர உலகம். 5 நிமிடம் நிம்மதியா டீவீ பாக்க முடியல. அந்த விளம்பரம் இந்த விளம்பரம் னு உயிர வாங்கிடுறாங்க.
1) உங்களுக்கு நெருக்கமானவங்கள் பத்தி தெரியணுமா? ஒரு கப் BRU-க்கு டைம் ஒதுக்குங்க. ( தெரியாம தான் கேக்குறேன் இந்த கட்டாந்சாய, மோரு, தண்ணீர், பாலு இந்த மாதிரி இயற்கையான திரவ உணவுகள குடிச்சா நமக்கு நெருக்கமான உறவுகள பத்தி தெரிஞ்சிக்க முடியாதோ??????)
2) பசி வந்திடா நீ நீயா இருக்க மாட்ட இப்டி தான் HEROINE மாதிரி ஆகிடுவ! எடுடா ஒரு SNICKERS. ( ஏங்க!! SNICKERS-க்கு பதிலா ஒரு ஆரஞ்சு பழமோ ஒரு ஆப்பிள் பழமோ சாப்பிட்டா வில்லன் மாதிரி ஆகிடுவோமோ? )
3) 3) ஐடியா INTERNET யூஸ் பண்ணுங்க. காதுல நோ பூ சுத்திங் காதுல நோ பூ சுத்திங். ( இத பத்தி எதுவும் சொல்ல விரும்பல , ஏன்னா அவங்களே உண்ம என்னனு சொல்றாங்க!!! அதாங்க, காதுல பூ சுத்திங்-னு)
4) உசர்ர் பாய் அப்பாவோட PHANT-அ ஒரு ஜான் கம்மி பண்ணுங்க. உசர்ர் பாய் அப்பாவோட phant-அ ஒரு ஜான் ……………….. கம்மி பண்ணுங்க. உஅர்ர் பாய் அப்பாவோட phant-அ ஒரு ஜான் …………ம்ம்ம்ம்ம்ம். கடைசியா அந்த phant என்ன ஆச்சு-னு உங்களுக்கு தெரியூம்.!!!!!! FIVE STAR சாப்பிடுங்க, டேஸ்ட்ல மெய் மறந்து போயிடுவீங்க. ( பாத்துங்க பஸ் ஸ்டாப்ல நிக்குற டைம் சாப்பிடாதீங்க மெய் மறந்து வேற பஸ்ல ஏரிட போரீங்க!!!)
5) ) ERVAMATIN உங்கள் முடி வளர்வதில் பிரச்சநையா??? உங்கள் பிரச்சநைக்கு இதோ தீர்வு. 044- 4050 4050 என்ற நம்பர் க்கு ஒரு மிஸ்ட் கால் குடுங்க உங்க பிரச்சநைய நாங்க பாத்துக்குறோம். ( ஒரு வேளை டிஸ்கவரீ channel ல காட்டுக்கு போறது இவங்க டீம் தானோ???? அதாங்க AMAEZAN காட்டுக்கு போய் தானே மூலிகை எடுத்து ERVAMATIN ரெடீ பண்றாங்க. அத தான் சொல்றேன்!!!!!!!!!!)
6) நமக்காக நம்ம கூட இருக்கவங்க நம்ம சொந்தம் தானே. நமக்காக ஜோஸ் ஆலுகாஸ், இது தங்கமான உறவு. ( நமக்காக ஜோஸ் ஆலுகாஸ் நா???? ஒரு வேழ ஃப்ரீயா கிடைக்குமோ தங்கம்.) நீங்க பாக்க சிவாஜி தாத்தா மாதிரியே இருக்கீங்க அமிதாப் UNCLE!!!!!!!!. ( இதுக்கும் நம்ம நகை வாங்குறததுக்கும் எனங்க தொடர்பு. !!!!!!!)
இந்த மாதிரி சொல்லிட்டே போகலாம். அமிதாப் சார் சிவாஜி தாத்தா மாதிரி இருக்ககததும் சாதாரண பாமர மனுசன் தங்கம் வாங்குறததுக்கும் என்ன சம்மந்தம்? பசிச்சா SNICKERS சாப்பிடுனு சொல்றீங்களே, SHOOTING SPOT- ல பசிச்சா நீங்க SNICKERS தான் சாப்பிடுவீங்களா? BOOST IS THE SECRET OF MY ENERGY-னு சொல்றீங்க? அப்போ அந்த BOOST-யாச்சும் சாப்டு உலக கோப்பைல வெற்றியை தக்க வச்சிறுக்கலாமே. ஒரு வேளை இந்த PRODUCTS எல்லாம் சாதாரண மக்களுக்கு மட்டும் தானோ? உங்கள மாதிரி உயர் தர மக்களுக்கு வேற மாதிரி PRODUCTS இருக்குமோ? இருக்கலாம். திரைப்பட பிரபலங்களும், குறிப்பிட்ட கம்பனி உரிமாயளர்களும் கோடி கணக்கில் சம்பாதிபதர்க்கு மூல தனமாக இருப்பது எனவோ சாதாரண அடித்தட்டு மக்களின் அறியாமை தான்.
இனிக்கு விளம்பரம் மூலம் மக்களை ஏமாற்றி, அந்த உணவ குழந்தைக்கு குடுங்க டிபன் பாக்ஸ் காலி ஆகிடும்னு சொல்றத நம்பி குழந்தைக்கு கொடுக்கிற பெற்றோர்களே! , உங்களிடம் ஒரு கேள்வி நீங்க உங்க குழந்தை பருவத்தில் இந்த உணவை தான் சாப்டீங்களா? இயற்கயான , சத்தான உணவு வகைகள் எவ்ளோவோ இறைவன் படைப்பில் இங்கு இருக்க செயற்கை உணவை திணுப்பது ஆரோக்கியமானதா?

நம் அறியமாயை பயன்படுத்தி அடுத்தவங்க சம்பாதிக்குறாங்க. காசு போன போகட்டும். உடல் நலம் கெட்டு போனா????? ஏமாலிகள் இருக்குற வர எமாத்துறவன் இருந்து கிட்டே தான் இருப்பான். நன்மை தனத்தை விளம்பரம் பண்ணுங்க மனதார பச்சை கொடி காட்டி வரவேற்போம். இல்ல சிவாஜி தாத்தா, BRU-னு தான் சொலுவீங்க-நா அதை ஒரு கை பாப்போம். 1947-ம் ஆண்டுக்கு முன்னாடி வர பிரிட்டிஷ்காரன் தாங்க நம்மள அடிமைபடுத்தினான். இன்று விளம்பரம் என்னும் போதையில் நம்மை நாமே அடிமை படுத்தி விட்டோம் . விளம்பர உலகம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

முடிவு நம் கையில்!!!!!!!!