Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

காதலித்ததால் ஆத்திரம்: மகள்-காதலன் இருவரையும் கோடாரியால் வெட்டிக்கொன்ற தந்தை

Advertisements

 லக்னோ:

உத்தர பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டம் பாம்காரி குர்மின் கிராமத்தை சேர்ந்தவர் மூல்சந்த். இவரின் மகள் கீதாவும்(வயது 19), அதே பகுதியை சேர்ந்த சுனில் அகர்வாரும் (வயது 19) ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலித்து வந்தனர். 3 ஆண்டுகளாக நீண்ட இவர்களது காதல் கீதாவின் தந்தை மூல்சந்துக்கு தெரியவந்தது. அவர் தன் மகளுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று கீதாவை சந்திப்பதற்காக சுனில் சென்றுள்ளார். அப்போது, கீதாவின் தந்தை மூல்சந்த் கோடாரியால் சுனிலைத் தாக்கியிருக்கிறார். சுனிலைக் காப்பாற்ற முயன்ற கீதாவையும் மூல்சந்த் கோடாரியால் தாக்க, இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக சுனிலின் தாத்தா போலீஸ் நிலையத்தில் புகார் செய்ய, புகாரைத் தொடர்ந்து மூல்சந்தை போலீசார் கைது செய்துள்ளனர். கீதா-சுனில் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version