கொல்கத்தா:
ஜெட் ஏர்வேஸ் விமானம் இன்று அதிகாலை பெங்களூர் விமான நிலையத்திலிருந்து கொல்கத்தா நோக்கி வந்து கொண்டிருந்தது. விமானம் கொல்கத்தா என்.எஸ்.சி போஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க ஆயத்தமானது.
விமானத்தின் வேகத்தை குறைத்து ஓடு பாதையை நோக்கி வந்தபோது பறவையொன்று விமானத்தின் மீது மோதியது. இதில் விமானத்தின் வலது என்ஜின் சேதமடைந்தது. எனினும், விமானி மிகவும் சாமர்த்தியமாக செயல்ட்டு, குறிப்பிட்ட ஓடுபாதையில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கினார்.
விமானம் சேதமடைந்ததைத் தொடர்ந்து கொல்கத்தாவிலிருந்து பெங்களூர் செல்ல இந்த விமானத்தில் முன்பதிவு செய்திருந்த பயணிகள், வேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.