Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

ஜெனரல் கே. எம். கரியப்பா

இந்திய கிரிக்கெட்டிற்கு சச்சின் டெண்டுல்கர் என்றால், இந்திய இராணுவத்திற்கு கொடந்தேரா மாடப்பா கரியப்பா என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்தியர்களும், வெளிநாட்டு பிரஜைகளும் வணங்கப்படும் மனிதனாக திகழ்ந்த கே.எம்.கரியப்பா அவர்கள், மீளும் திறனும், நித்திய தேசப்பற்றும் கொண்ட நபர். இதனாலேயே அவரை மக்கள், ‘கிப்பர்’ என்று அன்போடு அழைத்தனர். அவர் நல்லமைதிக்கும், திட்பத்திற்கும் எடுத்துக்காட்டாய் விளங்கியவர். மூன்று தசாப்தங்களாக பரவியிருந்த அவரது இராணுவ வாழ்க்கையில், தனது இறுதி மூச்சு வரை நாட்டிற்காக தன்னலமற்ற சேவை புரிந்தார். அவர் “பார்த்ததை எல்லாம், செய்து பார்த்த மனிதர்”. அவரது உறுதிகுலையாத அணுகுமுறையும், அழிவற்ற உணர்வும் உலக போர்களின் குழப்பம், நாட்டின் பகிர்வு, 1965 & 1971 போர்கள், மற்றும் நாட்டிற்கு வெளியே பல திட்டங்கள் போன்ற தேசிய பிரச்சனைகளை அனைத்தையும் எளிதாக கையாள உதவியது. பல விளம்பரங்களாலும், பாராட்டுதல்களாலும் கௌவுரவிக்கப்பட்டாலும், அவர் ஒரு சாதாரண மனிதனாக இருந்து, கடைசி மூச்சு இருக்கும் வரை அவரது கொள்கைகளான மதச்சார்பின்மை மற்றும் தேசப்பற்றில் மிகவும் உறுதியாக இருந்தார். இந்திய ராணுவத்தில் மிக முக்கிய பங்கு வகித்த கே.எம்.கரியப்பா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகள் பற்றியறிய தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஜனவரி 28, 1899

பிறந்த இடம்: கொடகு, மைசூர்

இறப்பு: மே 15, 1993

தொழில்: இந்திய இராணுவ வீரர்

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு

‘கொடந்தேரா மாடப்பா கரியப்பா’ என்றும், ‘சிம்மா’ என்றும் அழைக்கப்பட்ட கே.எம்.கரியப்பா அவர்கள், ஜனவரி 28, 1899ல் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த கூர்கிலுள்ள (கர்நாடகாவிலுள்ள தற்போதைய கொடகு) ஷனிவர்சந்தே என்ற இடத்தில் பிறந்தார். அவரது தந்தை கொடந்தேரா மாடப்பா, ஒரு வருவாய் அதிகாரியாக பணிபுரிந்து வந்ததால், சிம்மாவையும், அவரது மூன்று சகோதரர்களையும், இரண்டு சகோதரிகளையும் மிகவும் கண்டிப்போடும், பாசத்தோடும் வளர்த்தார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

கே.எம்.கரியப்பா அவர்கள், அவரது பெற்றோரை இளம் வயதிலேயே இழந்தாலும், தனது வாழ்க்கையில், அவரது வலுவான மற்றும் உறுதியான அணுகுமுறையை இழக்கவில்லை. அவரது தந்தையிடம் இருந்து அவர் கற்றுக்கொண்ட கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் மதிகேரியிலுள்ள மத்திய உயர்நிலை பள்ளியில் படிக்கும் காலத்தில் முன்னெடுத்து சென்றார். மேலும், அதிர்ஷ்டவசமாக தகுதிவாய்ந்த நிபுணத்துவ ஆங்கிலேய ஆசிரியர்களிடமிருந்து அவர் கல்வியும் கற்றார். அவர் சரியான நடத்தை மற்றும் எதிர்ப்பில்லாத ஆடை அணிவதன் மதிப்பையும் கற்றுக் கொண்டார். அவர் சென்னையில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்தார். ஒரு மாணவராக, கிரிக்கெட்டிலும், ஹாக்கியிலும் சிறந்து விளங்கிய அவருக்கு, இசை மீது பற்றும், சாமர்த்தியமாகவும், அழகாகவும் கை தந்திரங்கள் செய்யும் கலையும் இருந்தது. அவர் பிரசிடென்சி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, அவர் இராணுவ அதிகாரி வகுப்பு ஒன்றிற்கான (Class I) நேர்காணலில் பிரிட்டிஷ் அதிகாரிகளையும், ஆணையரையும் சாமர்த்தியமாகவும், அவரது புத்தி கூர்மையாலும் கவர்ந்து தேர்வு செய்யப்பட்டார். தேசிய சேவை செய்ய வேண்டும், நாட்டிற்காக தன்னை அர்ப்பணிப்பணிக்க வேண்டுமென்ற அவரது எண்ணம் அப்போதே மிகத் தெளிவாக இருந்தது.

இராணுவ வாழ்க்கை

இந்தியா சுதந்திரம் அடையாமல் இருந்ததால், கரியப்பா அவர்களின் ராணுவ பணிகளை, இராணுவத்தில் சேர்ந்தவுடனே தொடங்க முடியவில்லை. 1919ல், மும்பையிலுள்ள கர்நாடிக் இன்ஃபான்ட்ரி ஆஃப் தி கிங்’ஸ் கமிஷன்ட் ஆஃபிசர்ஸின் ஒரு தற்காலிக இரண்டாம் லெஃப்டினன்டாக அவரை நியமித்த போது, அவர் ராணுவத்தில் தனது பங்களிப்பை அளிக்கத் தொடங்கினார். பின்னர், 1922ல், அவர் ஒரு நிரந்தர இரண்டாம் லெஃப்டினன்ட்டாக மாற்றப்பட்டு, 1923ல் லெஃப்டினன்ட் நிலையில் உயர்த்தப்பட்டார். 1927ல் ஒரு கேப்டனாக இருந்த அவர், மிக விரைவிலேயே அதாவது 1938ல் மேஜராகவும், அடுத்த வருடத்தில் ஊழியர்களின் கேப்டனாகவும் பணிபுரிந்தார். இதற்கிடையில், மெசபடோமியாவிலுள்ள 37 டோக்ராவின் (தற்போதைய ஈராக்) தீவிர சேவையைப் பார்த்த அவர், இரண்டாவது விக்டோரியா ராணிக்கு சொந்தமான ராஜ்புத் லைட் காலாட்படையை அனுப்புமாறு கேட்டு அவருக்கு ஒரு கடிதம் வரைந்தார். மேலும், 1933ல் குவெட்டாவிலுள்ள பணியாளர்கள் கல்லூரியில் கல்வி மேற்கொண்டு, ‘முதல் இந்திய அதிகாரி’ என்ற பெருமையையும் தட்டிச் சென்றார்.

இந்திய சுதந்திரத்தின் போது, கரியப்பா அவர்கள், ஈராக், ஈரான், சிரியா, பர்மா, மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் உத்தரவின் கீழும், தானாக முன்வந்தும் பணியாற்றினார். மேலும் அவர், பிரிட்டிஷ் பேரரசின் அரசு அலுவல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 1946ல், அவர் எல்லை படை குழுவின் பிரிகேடியராக பதவி உயர்வு பெற்ற போது, கர்னல் அயூப் கான் என்பவர் (பின்னர் ஃபீல்ட் மார்ஷல் மற்றும் பாகிஸ்தான் ஜனாதிபதி ஆனார்) கரியப்பாவின் கீழ் பணியாற்றினார். 1947ல், இங்கிலாந்திலுள்ள காம்பெர்லியில் இருக்கும் இம்பீரியல் பாதுகாப்பு கல்லூரியில் ‘போருக்கான அதிகமான வழிகள்’ (Higher Directions of Wars) என்ற பயிற்சிப் பாடத்தை மேற்கொண்டார். இந்த பாடத்திட்டத்தில் தேர்வான முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் என்றும் கூட சொல்லலாம். இந்தியா இரண்டு நாடுகளாக பகிர்வான ஒரு பதட்டமான சூழ்நிலையில், ஒரு பொறுப்பான இந்திய அதிகாரியாக இருந்து இரண்டு நாடுகளுக்கான சொத்துக்களை பகிர்வு செய்யும் போது, அவர் ஒரு முறையான, அமைதியான, ​​மற்றும் கலக்கமுறாத வழியில் பகிர்வைக் கையாண்டார்.

1948ல் சுதந்திரத்திற்கு பின், கரியப்பா அவர்கள் ‘மேஜர் ஜெனரல்’ என்ற அந்தஸ்தை கொண்ட ‘பொது பணியாளர்களின் துணைத் தலைவராக’ நியமிக்கப்பட்டார். ‘லெஃப்டினன்ட் ஜெனரல்’ என்ற பதவி உயர்வோடு, அவர் ‘கிழக்கு இராணுவ தளபதி’ ஆனார். எனினும், 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான போர் நிகழ்வின் மூலம், மேற்கத்திய கட்டளையின் படி கரியப்பா அவர்கள், கமாண்டிங் தலைமை பொது அதிகாரியாக மாற்றப்பட்டார். லேவுடன் இணைந்த பகுதிகளான ஜோசிலா, ட்ராஸ், மற்றும் கார்கில் ஆகியவற்றை மீண்டும் நிறுவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஜனவரி 15, 1949 ஆம் ஆண்டு, கரியப்பா அவர்கள், இந்திய ராணுவத்தின் ‘முதல் தலைமை கமாண்டராகப்’ பொறுப்பேற்று, ஏகாதிபத்திய இந்திய இராணுவத்தை, தேசிய இந்திய இராணுவமாக மாற்றும் முக்கிய பணியில் ஈடுபட்டார். ஜனவரி 14, 1953 ஆம் ஆண்டு, இராணுவ தலைமை கமாண்டர் கடமைகளை துறந்து, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜிந்திரா சிங் என்பவரிடம் தனது பதவியை ஒப்படைத்தார்.

உயர் கட்டளைகள் மற்றும் அலுவலகங்கள்

இந்திய இராணுவத்திலிருந்து (29 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்ட ஒரு சங்கம்) ஓய்வு பெற்ற கரியப்பாவை ‘இந்திய உயர் ஆணையராக’ பதவியேற்க ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் வரவழைத்தது. மேலும், அவர் ஜூலை 1953 லிருந்து ஏப்ரல் 1956 வரை அந்நாடுகளில் பணிபுரிந்தார். பல வெளிநாடுகளின் ஆயுத படைகள் மறுசீரமைப்பில் அவர் சுறுசுறுப்பாக பங்கேற்றார். அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ஹாரி எஸ். ட்ரூமன் அவர்கள், அவருக்கு மெரிட் ஆஃப் ஹானர் தளபதி “தலைமை ஆணை” (Order of the Chief) என்ற தலைப்பை வழங்கினார். கரியப்பா அவர்கள், தனது 87வது வயதில், ஜனவரி 14, 1986 ஆம் ஆண்டு, இந்திய ஜனாதிபதியான ஜெயில் சிங் மூலமாக ‘ஃபீல்ட் மார்ஷல்’ என்ற பதவி வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

அவரது கோட்பாடு

“ஒரு மனிதன் இந்துவாகவோ, முஸ்லீமாகவோ, சீக்கியராகவோ, பார்சியாகவோ, அல்லது கிறிஸ்துவராகவோ இருந்து நாட்டுக்காக எவ்வளவு காலம் வேண்டுமானாலும் சேவை செய்யும் வரை என்னால் சூளுரை தர முடியாது. இவை எல்லாம் தான் எனக்கு முக்கிய விஷயங்களாகும். ஒரு இந்தியன், தனது இறுதி மூச்சு வரை இந்தியனாகவே இருப்பான். என்னை பொறுத்த வரை, இரண்டே இரண்டு ‘ஸ்தான்’ களே உள்ளது – ஒன்று இந்துஸ்தான், மற்றொன்று ஃபௌஜிஸ்தான்.” கரியப்பாவின் இந்த தெளிவான வார்த்தைகளே, அவர் தனது நாட்டின் மீது கொண்ட இடையறா தேசப்பற்றும், மதச்சார்பற்ற நம்பிக்கைகளையும் அவரது இறுதி மூச்சு வரை உறுதியாக கடைப்பிடித்ததை பிரதிபலிக்கின்றன. அனைத்து பதவி உயர்வுகள், நாட்டின் அரசியல் மற்றும் அதிகார ஏற்றத்தாழ்வுகள் மத்தியில், கரியப்பா அவர்கள் ஒரு சாதாரண மனிதராக தனது நம்பிக்கைகளை இழக்காமல் இருந்தார். அவர் அதற்கு பதிலாக, மிகுந்த கட்டுப்பாடுடனும், கவனத்துடனும் அயராது உழைத்து  குழப்பங்களிலிருந்து வெளிவரும் வழியைக் கையாண்டார் எனலாம்.

எதிரிகளை எதிர்கொள்ள சிறிதளவும் கூட பயப்படாமல் இருந்த கரியப்பா, அவர்களை நேருக்கு நேர், கண்ணுக்குக் கண் சந்திக்கும் மனோதைரியம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. அவரது மூத்த அதிகாரிகள் கூட அவரது இந்த தைரியத்தைக் கண்டு வியந்துள்ளனர். ஒரு கடினமான பணியின் முதன்மை பொறுப்பை ஏற்றாலும், அவர் தனது மூத்த மற்றும் இளைய அதிகரிகாரிகளிடம் மிகவும் பிரபலமாகவும், நேசத்துடனும், மரியாதையுடனும் போற்றப்பட்டார். அவர் நடுவில் வரும் சமரசத்தை  வெறுத்ததோடு மட்டுமல்லாமல், தனது கடமைகளை முழுமனதோடு செய்ய வேண்டுமென்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். மேலும், 1965ல் பாகிஸ்தானுக்கு எதிரான யுத்தத்தின் போது, ஒரு இந்திய விமானப்படை விமானியான அவரது மகன் சுடப்பட்டு, ஒரு கைதியாக அழைத்து சென்ற போதும், அவர் அயூப் கானின் (நாடுகளின் பகிர்வுக்கு முன் இருவரும் சேர்ந்து பணியாற்றினர்) எந்தவொரு சலுகைகளையும் ஏற்க மறுத்தார். மேலும், அவர் ‘தனது மகன் போரில் கைது செய்யப்பட்டு மற்ற இந்திய கைதிகளைப் போலவே நடத்தப்படுகிறான் என்றும், ஒவ்வொரு இராணுவம் வீரனும் எனது மகன் என்றும்’ கூறினார்.

இறப்பு

பொது சேவை கடமைகளை முடித்த பின்னர், கரியப்பா அவர்கள் இயற்கை அமைதி மற்றும் பசுமை சூழல் ததும்பிய கொடகுவிலுள்ள மதிகேரியிலிருக்கும் ரோஷனாராவிலுள்ள அவரது அமைதியான வீட்டில் குடியேறி, பல்வேறு அடிப்படை பிரச்சினைகள் பற்றி மக்களுக்கு பயிற்றுவித்தார். இந்திய வரலாற்றில் மிக பெரிய அத்தியாயங்களில் ஒன்றை ஒரு முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக மே 15, 1993 ஆம் ஆண்டு, தனது 94 வயதில், கரியப்பா அவர்கள் காலமானார்.

காலவரிசை

1899: ‘கொடந்தேரா மாடப்பா கரியப்பா’ கூர்கிலுள்ள (கர்நாடகாவிலுள்ள தற்போதைய கொடகு) ஷனிவர்சந்தே என்ற இடத்தில் பிறந்தார்.

1919: பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தின் தற்காலிக இரண்டாம் லெஃப்டினன்ட்டாக பதவியேற்றார்.

1921: தற்காலிக லெஃப்டினன்ட்டாக பொறுப்பேற்றார்.

1922: ஒரு நிரந்தர இரண்டாம் லெஃப்டினன்ட்டாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

1923: மீண்டும் லெஃப்டினன்ட் நிலையை அடைந்தார்.

1927: கேப்டனாக பதவியேற்றார்.

1938: மேஜர் என்ற நிலையைத் தட்டிச் சென்றார்.

1942: தற்காலிக லெஃப்டினன்ட் கர்னலாக மாறினார்.

1944: தற்காலிக பிரிகேடியராக மாறினார்.

1946: லெஃப்டினன்ட் கர்னலாக மாறி, பின்னர் பிரிகேடியராகவும் பொறுப்பேற்றார்.

1947: இந்திய இராணுவத்தின் மேஜர் ஜெனரலாக பதவி வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

1948: லெஃப்டினன்ட் ஜெனரலாக மாறினார்.

1949: தலைமை கமாண்டராக பணியில் அமர்த்தப்பட்டார்.

1953: தனது அலுவலகத்தில், தலைமை கமாண்டர் என்ற பதவியை அதிகாரப்பூர்வமாக துறந்தார்.

1953: ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் இந்திய உயர் ஆணையராக பதவியேற்றார்.

1983: அப்போதைய இந்திய ஜனாதிபதியால், ‘ஃபீல்ட் மார்ஷல்’ என்ற தலைப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

1993: தனது 94வது வயதில் இயற்கை எய்தினார்

Exit mobile version