தலைவர்கள்

சௌந்தரபாண்டியன் நாடார்

பட்டிவீரன்பட்டியில் பிறந்து, தான் பிறந்த ஊர் பெயரைத் தனது பெயருடன் இணைத்த வ. பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள், நாடார் மகாஜன சங்கத்தின் முக்கிய அங்கமாக இருந்தவர். சென்னை சட்ட சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘முதல் நாடார்’ என்ற பெருமைக்குரியவர். பெரியார் அவர்கள், உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தோடு, நாடார் சமூகத்தை இணைக்கப் பெரிதும் பாடுபட்டார். நாடார் சமூகத்தின் முடிச்சூடா மன்னனாகத் திகழ்ந்த பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் நாடார் சமூகத்திற்குப் [...]

பட்டிவீரன்பட்டியில் பிறந்து, தான் பிறந்த ஊர் பெயரைத் தனது பெயருடன் இணைத்த வ. பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள், நாடார் மகாஜன சங்கத்தின் முக்கிய அங்கமாக இருந்தவர். சென்னை சட்ட சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘முதல் நாடார்’ என்ற பெருமைக்குரியவர்.

பெரியார் அவர்கள், உருவாக்கிய சுயமரியாதை இயக்கத்தோடு, நாடார் சமூகத்தை இணைக்கப் பெரிதும் பாடுபட்டார். நாடார் சமூகத்தின் முடிச்சூடா மன்னனாகத் திகழ்ந்த பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் நாடார் சமூகத்திற்குப் பெரிதும் பெருமை சேர்த்த அவர்களின் செயல்கள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: 28 செப்டம்பர், 1892

பிறப்பிடம்: பட்டிவீரன்பட்டி, தமிழ்நாடு, இந்தியா

இறப்பு: 22 பிப்ரவரி, 1953

பணி: நாடார் மகாஜன சங்க தலைவர், சென்னை சட்ட சபை உறுப்பினர்

நாட்டுரிமை: இந்தியன்

பிறப்பு

வ. பட்டிவீரன்பட்டி ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள், இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் இருக்கும் திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் அருகிலுள்ள பட்டிவீரன்பட்டியில் சொந்தமான காபி தோட்டங்கள் வைத்திருந்த முக்கிய பண்ணையாள் குடும்பத்தில் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, 1892 ஆம் ஆண்டில் பிறந்தார்.

ஆரம்பகால வாழ்க்கை

சிறு வயதிலிருந்தே சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள், பிராமண ஆதிக்கத்தைப் பார்த்து வளர்ந்தார். நாடார் சமூக மக்களின் மேம்பாட்டுக்காக உழைக்க வேண்டுமென்ற எண்ணம் அவரது இளம் பருவத்திலிருந்தே அவரது மனதில் விதையாய் அரும்பி, வளர்ந்து வந்தது. அப்போது சுதந்திரப் போராட்ட சூழலே நிலவியதால், அதன் தாக்கமும் அவரைப் பெரிதும் பாதித்தது.

தொழில் வாழ்க்கை

நாடார் மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் உறுதியாக செயல்பட்ட அவர், நாடார் மகாஜன சங்கத்தின் முக்கியத் தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அவர், அப்பதவியில் 1920 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரை செம்மையாக செயல்பட்டு, அவரது மக்களுக்காக பல நலத்திட்டங்களும், உதவிகளும் செய்து வந்தார். 1920 ஆம் ஆண்டில், பி. டி. ராஜன் அவர்கள் சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களை சட்டப் பேரவைக்குப் பரிந்துரைத்ததால், அவ்வாண்டில் சென்னை சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1937 ஆம் ஆண்டு வரை சட்டப் பேரவை உறுப்பினராக பணியாற்றிய அவர், நாடார் சமூகத்தின் நலன்களை நீதி கட்சி மற்றும் கவுன்சிலில் எடுத்துரைக்கும் நபராக செயல்பட்டார். மேலும் அவர், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகக் குழு தலைவராக 1928 முதல் 1930 வரை பணியாற்றினார். 1943 முதல் 1947 ஆம் ஆண்டு வரை, அவர் மதுரை மாவட்ட சபைத் தலைவராகவும் பணியாற்றினார்.

சமூக சீர்த்திருத்தங்கள்

தான் ஒரு சிறுவனாக இருந்து போதே, சமுதாயத்தில் நடந்த முறைகேடுகளைக் கண்டு வெகுண்டெழுந்த அவர், பெரியார் ஈ. வெ. ராமசாமி அவர்களின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு அவரை தனது மானசீக குருவாகக் கருதி, அவர் சென்ற வழியைப் பின்தொடர்ந்தார். ஆகவே, அவர் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றும் தீவிர பக்தனாக உருவெடுத்தார். இதன் வெளிப்பாடாக அவர், புனித கயிறு புறக்கணிப்பு மற்றும் பிராமண பூசாரிகள் நிராகரிப்பு போன்ற மாறுதல்களை மக்களிடம் கொண்டுவந்தார். மேலும் அவர், சுய மரியாதை திருமணம் மற்றும் சாதிமத வேறுபாடின்றி உணவருந்தும் பழக்கத்தையும் அவரது சமூக மக்களிடம் வலியுறுத்தினார். அவரது இந்தப் புரட்சிகரமான செயல்களைக் கண்ட பெரியார் அவர்கள், 1929ல் சுயமரியாதை மாநாட்டின் தலைவராக அவரை நியமித்தார். நாடார் என்பதால், அவர் நாடார் மக்களின் நலனுக்காக மட்டும் பாடுபடவில்லை. அவர், தலித்துக்கள், தியாக்கள் போன்றோரின் முன்னேற்றத்திற்காகவும், பிற சமூக காரணங்களுக்காகவும் அயராது பாடுபட்டார். அவர் கமுதி தண்டனை வரியை மிகக் கடுமையாக எதிர்த்து, பல்வேறு போராட்டங்கள் நடத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்து வெற்றியும் கண்டார்.

இறப்பு

சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களது நிதிக் கட்சியில் உள்ள ஊழல் காரணமாக அவரது கட்சி செல்வாக்கு நாளடைவில் நலிவடைந்தது. மேலும், இந்திய தேசிய காங்கிரஸின் திட்டங்கள் மற்றும் அதில் நாடார் சமூகத்தை சேர்ந்த காமராஜர் போன்ற தலைவர்கள் வளர்ந்து வந்ததால், சௌந்தரபாண்டியன் நாடார் அவர்களின் அரசியல் வாழ்க்கை வீழ்ச்சி கண்டது. இதன் காரணமாக, அவரது உடல் நலம் குன்றி, அவர் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.

நினைவஞ்சலி

ஐயா சௌந்தரபாண்டியன் நாடார் அவர்கள், ஆட்சியில் இருந்த போது, பட்டிவீரன்பட்டியில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளை நிறுவினார். மேலும் பல கல்வி நிறுவனங்கள் அவரது பெயரில் செயல்பட்டு வருகிறது. ‘நாடார் சமூகத்தின் முடிசூடா மன்னனாக’ இருந்த அவர், பட்டிவீரன்பட்டியில் காஃபி கூட்டுறவு பதன்படுதல் பணிகளை அமைக்கும் கருவியாகவும் இருந்தார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள முக்கியக் கடைத்தெருவான பாண்டி பஜாருக்கு, ‘சௌந்தரபாண்டிய  நாடார்’ அவர்களின் பெயரிடப்பட்டது என்று பலரும் கூறுகின்றனர். அண்மையில், அந்தக் கடைத்தெருவின் நுழைவு வாயிலில், தலைவர் சௌந்தரபாண்டிய  நாடார் அவர்களின் சிலை அமைக்கப்பட்டு, ‘சௌந்தரபாண்டியன் அங்கத்’ என்றும் ஒரு பேர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

காலவரிசை

1892: தமிழ்நாட்டில் இருக்கும் திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் அருகிலுள்ள பட்டிவீரன்பட்டியில் செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி, 1892 ஆம் ஆண்டில் பிறந்தார்.

1920: நாடார் மகாஜன சங்கத்தின் முக்கியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1920: சென்னை சட்ட பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1928 – 1930: ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகக் குழு தலைவராகப் பணியாற்றினார்.

1943 – 1947: மதுரை மாவட்ட சபைத் தலைவராகப் பணியாற்றினார்.

1929: பெரியார் அவரை, சுயமரியாதை மாநாட்டின் தலைவராக அவரை நியமித்தார்

1953: அவரது உடல் நலம் குன்றி, அவர் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி, 1953 ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.