‘சாரி செல்லம்..’ பொதுவாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள். இது குழந்தைகளை சமாதானப்படுத்த மட்டுமல்ல அவர்களது நடத்தையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏன் குழந்தைகளிடம் பெற்றோர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.
மரியாதையாக நடந்துக் கொள் என்று குழந்தையிடம் நீங்கள் அதிகாரம் செய்யக் கூடாது. நீங்கள் செய்யும் தவறுக்கு குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்டால், அவர்களை நீங்கள் மதிப்பதாக எண்ணுவார்கள், அவர்களும் மரியாதை கொடுப்பார்கள். அதேபோல், அவர்கள் தவறிழைக்கும் போது கூச்சப்படாமல் மன்னிப்பு கேட்பார்கள்.
சில பெற்றோர்கள் குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்பதை தன்மானத்தை இழப்பதாக கருதுவதுண்டு. உண்மையில், இது உங்களது பலவீனத்தை காட்டும் செயல் இல்லை, மாறாக தவறை ஒப்புக்கொள்ளும் உங்களது பலத்தை காட்டும் செயல்.
குழந்தையிடம் மன்னிப்பு கேட்பதன் மூலம், வீட்டிலோ அல்லது வெளியிடத்திலோ, உங்களது குழந்தை தவறு செய்தால், எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் மன்னிப்பு கேட்பார்கள். அது ஒரு சிறந்த குணாதிசயமாகும்.
பெற்றோராக நீங்கள் பெருமை கொள்ள, உங்களது குழந்தை தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பதனால் மனநிறைவு உண்டாகும்.
மன்னிப்புக் கேட்பது குற்றத்தை பகிரங்கமாக நீங்கள் ஒப்புக்கொள்வதாக அர்த்தம். உங்களது குறைகளை ஏற்றுக் கொள்வது மனதை லேசாக்கும்.