Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

பறவைகளை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும்: ஆய்வில் தகவல்

Advertisements

லண்டன்: இந்த காலத்தில் அதிகரித்து வரும் செல்போன் டவர்கள் மற்றும் மரங்களை அழிப்பது ஆகிய காரணங்களால் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம் குறைந்து உற்சாகம் பிறக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த எக்ஸீடர் பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியது. அதில், பறவைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு மன அழுத்தம், பதற்றம், மனச்சோர்வு ஆகியவை குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதுதவிர வசிக்கும் வீட்டைச் சுற்றி புதர்கள், மரங்கள் ஆகியவை இருப்பதும் மனிதர்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கும் எனவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து எக்ஸீடர் பல்கலைக்கழக பேராசிரியர் டேனியல் காக்ஸ் “நகரத்தில் வசிப்பவர்களை விட இயற்கையோடு இணைந்து வாழ்பவர்களே அதிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version