அஜீத் நடிக்கவுள்ள அடுத்த படத்தில் அவருக்கு தங்கையாக லட்சுமி மேனன் நடிக்கவுள்ளதாக நேற்று வெளிவந்த செய்தி குறித்து லட்சுமி மேனன் தற்போது விளக்கமளித்துள்ளார்.
அஜீத் படக்குழுவினர் என்னிடம் அஜீத்துக்கு தங்கையாக நடிக்க அணுகியது உண்மைதான். அஜீத்துடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தாலும், இந்த படத்தில் அவருடைய தங்கை கேரக்டருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதை படத்தின் ஸ்கிரிப்ட்டை பார்த்து தெரிந்து கொண்டு அதன்பின்னர் என்னுடைய முடிவை தெரிவிக்க உள்ளேன்’ என்று நிபந்தனையுடன் கூறியுள்ளார்.
ஏற்கனவே அஜீத் தங்கை கேரக்டரில் நடிக்க நித்யா மேனன் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி ஹீரோயின் வரிசையில் தன்னை இணைத்து கொண்டிருக்கும் லட்சுமி மேனன், அஜீத்துக்காக தங்கை கேரக்டரில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்னும் பெயர் வைக்கப்படாத அஜீத் நடிக்கவுள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கின்றார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்நிலையில் இந்த படத்தில் சந்தானம், சூரி, மற்றும் தம்பி ராமையா ஆகிய மூவரும் காமெடியில் கலக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.