சிட்னி: உலக கோப்பையில், இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான நாளைய அரையிறுதி போட்டியை மாணவர்கள் கண்டுகளிக்க வசதியாக, தெலங்கானா மாநில பள்ளி, கல்லூரிகளுக்கு, சந்திரசேகரராவ் விடுமுறை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியா-ஆஸ்திரேலியா நடுவே நாளை, சிட்னியிலல், உலக கோப்பை அரையிறுதி போட்டி நடைபெற உள்ளது. இதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்தியாவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில், நாளை 34 சதவீதம் பேர் விடுமுறை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கிரிக்கெட் போட்டியை கண்டு கழிக்க வசதியாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுதொடர்பாக, அரசு சுற்றரிக்கை இன்னும் வெளியாகவில்லை.
இந்தியா-ஆஸி. உலக கோப்பை போட்டிக்காக தெலங்கானாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
