Flash News Sports

நமக்கு ‘மஞ்ச’ சட்டை… அப்ப ‘பச்சை’யுடன் மோதப் போவது யாரு.. கருப்பா இல்லை சிவப்பா?

சிட்னி: உலக கோப்பையின், 2வது அரையிறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா மோத உள்ள நிலையில், 24ம்தேதி நடைபெற உள்ள முதல் அரையிறுதி போட்டியில், தென் ஆப்பிரிக்காவுடன், மோதப்போவது நியூசிலாந்தா அல்லது, வெஸ்ட் இண்டீசா என்பது நாளை தெரிந்துவிடும். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இப்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. காலிறுதியில், வங்கதேசத்தை இந்தியாவும், பாகிஸ்தானை, ஆஸ்திரேலியாவும் தோற்கடித்துள்ளன. அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் வரும் 26ம்தேதி வியாழக்கிழமை சிட்னி மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் மோத உள்ளன. அன்று, இந்திய நேரப்படி, காலை 9 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது.
முதலாவது செமி பைனல் வரும் 24ம்தேதி செவ்வாய்க்கிழமை, நியூசிலாந்தின், ஆக்லாந்து நகரில் நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி அன்று காலை 6.30 மணிக்கு அப்போட்டி தொடங்க உள்ளது. காலிறுதி போட்டியில், இலங்கையை வீழ்த்திய, தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே முதலாவது செமி பைனல் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. தென் ஆப்பிரிக்காவுடன் மோதப்போகும் அணி எது என்பது நாளை முடிவாகும். ஏனெனில், நாளை நடைபெறும் இறுதி, காலிறுதி போட்டியில், நியூசிலாந்தும், வெஸ்ட் இண்டீசும் மோதுகின்றன. இவ்விரு அணிகளில் எது வெற்றி பெறுமோ அந்த அணி 24ம்தேதி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்ளும்.

About the author

Julier