Cinema Flash News

10 நாட்களுக்கு மட்டுமே ஸ்டார் வார்ஸ்! தயாரிப்பாளர் சங்கம் திட்டவட்டம்

திரையரங்குகள் கிடைக்காமல் தவித்து வரும் சிறிய பட்ஜெட் படங்களின் ரிலீஸை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது கலைப்புலி தாணு தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம். இந்த விதிமுறைகளுக்கு அனைத்து தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களிடம் ஒப்புதல் பெறப்பட்டு வருகிறது.

இதற்கு வழக்கம்போல ஆதரவு, எதிர்ப்பு என இரு பிரிவுகளாக பிரிந்து நின்று மல்லுக்கட்ட தொடங்கியிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதிலும், ‘பொங்கல், தமிழ் வருடப் பிறப்பு, உழைப்பாளர் தினம், சுதநதிர தினம், தீபாவளி… என வருடத்தில் 10 நாட்களில் மட்டும்தான் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு மேல் தயாராகும் பெரிய படங்களை ரிலீஸ் செய்யவேண்டும்’ என்ற விதிமுறைக்குதான் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.அதுவும் பெரிய ஹீரோக்களை வைத்து படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள்தான் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ‘இந்த விதிமுறையால் மூன்று நான்கு பெரிய படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் சூழ்நிலை உருவாகும். வசூலும் பாதிக்கப்படும். இதற்கு சமீபத்திய உதாரணம் வீரம்&ஜில்லா ஒரேநாளில் ரிலீஸ் ஆனதைச் சொல்லலாம்.

அந்த இரண்டு படங்களுக்குமே வசூல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஆனதற்கு ஒரே நாளில் ரிலீஸ் செய்ததுதான் காரணம். அதனால் இந்த விதிமுறையை மறுபரிசீலணை செய்யவேண்டும்’ என்கின்றனர். அதேபோல தமிழ் சினிமா தயாரிப்புக்கு மூன்றுமாதம் பிரேக் விடுவதாக எழுந்த பேச்சுக்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ‘வாங்கின கடனுக்கு இந்த மூணு மாசத்துக்கான வட்டியை கொடுக்குறோம்னு சொன்னா, பிரேக்குக்கு சம்மதிக்கிறோம்’ என்கிறார்களாம் சில தயாரிப்பாளர்கள்.

About the author

Julier