News தற்போதைய செய்தி

டிரம்ப் மீது வடகொரியா கடும் சாடல் ‘கொடிய குற்றவாளி; மரண தண்டனைக்கு உரியவர்’

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தை வடகொரியாவுக்கு எதிராக ஆதரவு திரட்டுகிற பயணமாக அமைத்துக் கொண்டார்.
நவம்பர் 16, 2017, 04:15 AM

சியோல்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது சமீபத்திய ஆசிய நாடுகள் சுற்றுப்பயணத்தின் போது வியட்நாமில் வைத்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட ஒரு பதிவில், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் தன்னை முதியவர் என்று விமர்சிக்கிறாரே என ஆதங்கம் தெரிவித்தவர், அதே பதிவில் அவரை குள்ளமானவர், குண்டர் என விமர்சித்தார்.

இது வடகொரியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நாட்டின் ஆளுங்கட்சி பத்திரிகை ‘ரோடாங் சின்முன்’ இதுபற்றி தலையங்க கட்டுரை எழுதி உள்ளது. டிரம்பை பலவாறு சாடி உள்ளது.

அதில், ‘‘வடகொரியாவின் மாபெரும் தலைமையின் கவுரவத்துக்கு இழுக்கு சேர்க்கிற வகையில் விமர்சித்த குற்றம், மன்னிக்க முடியாத மோசமான குற்றம். அவர் (டிரம்ப்) கொடூரமான குற்றவாளி என்பதையும், கொரிய மக்களால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளவர் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

About the author

Aspin Maju