“கோச்சடையான்” பட வெளியீட்டின் போது ரஜினிகாந்த் ட்விட்டரில் இணைந்தார். முதல் ட்விட்டாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதிகப்படியாக ட்விட்டரில் எந்த வித கருத்தும் அவர் தெரிவிக்கவில்லை.
தொடர்ந்து டிசம்பர் 12ல் தன்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்துகள் சொன்ன பிரதமர் மோடி, கலைஞர் கருணாநிதி மற்றும் பலருக்கும் நன்றிகளை ட்விட்டரில் தெரிவித்தார்.அதே நாளில் ‘லிங்கா’ வெளியானது குறிப்பிடத்தக்கது.”லிங்கா’ பிரச்னையின் போது கூட எந்த வித கருத்துகளையும் ட்விட்டரில் தெரிவித்ததில்லை. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்பொழுது ட்விட்டரில் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் மறைவிற்கு இரங்கல் செய்தியை ட்விட் செய்துள்ளார்.
தனக்கு பிடித்தமான தலைவராக லீ குவான் யூவைத்தான் எப்போதுமே எந்த பேட்டியிலும் சொல்கிறவர் ரஜினி. தன்னுடைய ட்விட்டரில், “ அவர் மறைவு எனக்கு கருப்பு தினம். சிங்கப்பூர் மக்கள் அடையும் வருத்தத்தினை நான் உணர்கிறேன். சிங்கப்பூருக்கே மிகப்பெரிய இழப்பு இவரின் மறைவு” என்று தன்னுடைய இரங்கல் செய்தியை வெளியிட்டிருக்கிறார் ரஜினி காந்த்.
இதுவரை ரஜினிகாந்த் 12 ட்விட்களை பதிவு செய்துள்ளார். 16 லட்சம் பேர் இவரை பின் தொடர்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.