பாரீஸ்: பிரான்சில் 142 பயணிகளுடன் சென்ற ஏர்பஸ் விமானம் தெற்கு பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஸ்பெயின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டஸ்செல்டாப் நகருக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில் யாரும் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்று பிரான்ஸ் அதிபர் தகவல் தெரிவித்துள்ளார்.