ரயில் நிலைய பிளாட்பார்ம் கட்டணம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 10 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களின் உள்ளே செல்ல பிளாட்பார்ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது பிளாட்பார்ம் டிக்கெட்டின் விலை 5 ரூபாயாக உள்ளது. இந்நிலையில் பிளாட்பார்ம் கட்டணத்தை உயர்த்த ரயில்வே துறை தீர்மானித்துள்ளது.
இதன்படி, வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிளாட்பார்ம் கட்டணம் ரூ.5லிருந்து ரூ.10 ஆக அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்து, அனைத்து ரயில்வே மண்டல அலுவலகங்களுக்கும் ரயில்வே துறை தகவல் அனுப்பியுள்ளது. புதிய கட்டணத்தில் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளை அச்சடித்து போதிய அளவில் இருப்பில் வைத்துக் கொள்ளும்படியும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பண்டிகை மற்றும் திருவிழாக் காலங்களில் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் அளவுக்கு ஏற்ப பிளாட்பார்ம் டிக்கெட் கட்டணத்தை மேலும் உயர்த்துவது குறித்து, அந்தந்த ரயில்வே மண்டல மேலாளர்களே முடிவு செய்து கொள்ளவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது