‘அஞ்சலி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷாமிலி (நடிகை ஷாலினியின் தங்கை) ‘துர்கா,’ ‘தைப்பூசம்,’ ‘எங்க பாப்பா’ உள்பட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ‘ஓய்’ என்ற தெலுங்கு படத்தில் மட்டும் கதாநாயகியாக நடித்த அவர், அப்புறம் சென்னை பெண்கள் கிறிஸ்தவ கல்லூரியில் சேர்ந்து, ‘விசுவல் கம்யூனிகேஷன்’ படித்து பட்டதாரி ஆனார். அதையடுத்து, சிங்கப்பூர் சென்று மேல் படிப்பை முடித்தார்.
இப்போது அவர் நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால், தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிக்க முடிவு செய்து இருக்கிறாராம்!