இளைய தளபதி தற்போதெல்லாம் தன் படங்களில் மட்டுமே தான் கவனமாக இருக்கின்றார். சொன்ன தேதியில் படத்தை முடித்து வெளியிட வேண்டும், வேறு எந்த அரசியல் சம்மந்தப்பட்ட விஷயங்களிலும் தலையிடாமல் உள்ளார்.சமீபத்தில் புலி படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் தலக்கோணத்தில் நடந்தது. அப்போது எந்த நட்சத்திர ஹோட்டலுக்கு செல்லாமல், அந்த பகுதி கிராமத்து மக்கள் வீடுகளிலேயே விஜய் தங்கினாராம்.மேலும், அந்த 40 நாட்களும் அந்த பகுதி மக்களிடம் மிக அன்பாக பேசி, சிரித்து ஜாலியாக இருந்துள்ளார். இதை கண்ட பலரும் இத்தனை பெரிய நடிகர் நம்மிடையே இவ்வளவு சாதரணமாக பழகுகிறார் என கண் கலங்கினார்களாம். அந்த இடத்திலிருந்து படக்குழுவினர்கள் கிளம்பும் போது, விஜய் அனைவருக்கும் பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து தான் சென்றாராம்.