Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

“ஹெலிகாப்டரை” மிஸ் பண்ணாலும் “கேட்ச்”சில் நம்ம மனசை “கிஸ்” பண்ணிட்டாரே டோணி!

சென்னை: இன்று டோணி ரசிகர்கள் ரொம்பவே ஏமாந்து போய் விட்டார்கள். காரணம், அவரது மற்றும் அவரது ரசிகர்களின் பேவரைட் ஷாட்களை பார்க்க முடியாமல் போனதால். அடித்து நொறுக்கி, அள்ளிப் போடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், வந்த வேகத்தில் டோணி அவுட்டாகிச் செல்லவே ரசிகர்கள் ரொம்பவே ஏங்கிப் போய் விட்டனர். அடடா டோணி கை நனைக்காமல் ஒரு விருந்தா என்ற மன நிலையில்தான் ரசிகர்கள் இருந்தனர். வழக்கமாக கடைசி ஓவர்களில் பிரித்து மேய்ந்து பின்னி எடுப்பவர் டோணி. அது பர்ஸ்ட் பேட்டிங்காக இருந்தாலும் சரி, சேஸிங்காக இருந்தாலும் சரி. பெஸ்ட் பினிஷர் என்ற பெயரே அதற்குத்தானே அவருக்கு வந்தது. அதேபோல ஹெலிகாப்டர் ஷாட் அடிக்காமல் அவர் இருந்ததும் கிடையாது.
ஆனால் இன்று எல்லாமே அவர் இல்லாமல் நடந்தேறியது. இது டோணி ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான். 11 பந்துகளில் 6 ரன் மட்டும் எடுத்து டோணி அவுட்டானால் யாருக்குத்தான் சங்கடமாக இருக்காது. ஆனால் டோணி தனது கேப்டன்ஷியில் தற்போது கலக்கி வருகிறார். கூடவே விக்கெட் கீப்பிங்கிலும் அசத்துகிறார். தமிம் இக்பாலை அழகாக கேட்ச் செய்து அனுப்பிய அவர், ஷமி பந்துி வீச்சில், செளம்யா சர்க்காரை மிகப் பிரமாதமாக அவுட் செய்து வெளியேற்றினார். ஷமி வீசிய அவுட்சைட் எட்ஜ் பந்தை சர்க்கார் அடிக்க, அதை வெகு அழகாக நேர்த்தியாகப் பிடித்து சர்க்காரைக் கலைத்து விட்டார் டோணி. மேலும், பவுலர்களையும் வெரைட்டியாக பந்து வீச வைத்து வங்கதேச பேட்ஸ்மேன்களைக் குழப்பி அதில் குளிர் காய்ந்து வருகிறார் டோணி என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/dhoni-failed-with-bat-but-impressed-with-his-captaincy-222949.html

Exit mobile version