Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீராங்கனையாக சானியா மிர்சா தேர்வு!

Advertisements

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையாக முன்னேறி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். இந்தியாவிலிருந்து டென்னிஸ் வீராங்கனை ஒருவர் இப்படிப்பட்ட சாதனையை நிகழ்த்தியது இதுவே முதல்முறையாகும்.

டென்னிஸ் உலகில் பரபரப்பான வெற்றிகளை தொடர்ந்து பதிவு செய்து வரும் மார்டினா ஹிங்கிஸ் – சானியா மிர்சா ஜோடி WTA Family Circle Cup போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளது. சார்லஸ்டனில் இன்று நடந்த lop-sided final ஆட்டத்தில் காஸே டெல்லாகுவா – டாரிஜா ஜூராக் ஜோடியை 6-0, 6-4 என்ற செட் கணக்கில் வெறும் 57 நிமிடங்களுக்குள் வென்று அசத்தியிருக்கிறது சானியா-ஹிங்கிஸ் ஜோடி.

சர்வதேச தரவரிசையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் வாயிலாக 470 புள்ளிகள் உள்பட மொத்தம் 7965 புள்ளிகளை சேகரித்து முதலிடத்தை பெற்றிருக்கிறார் சானியா மிர்சா. இதுகுறித்த அதிகாரபூர்வ தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது. இதற்கு முன்னதாக, 1990-களில் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ், மகேஷ் பூபதி என ஆண்களே டாப் ரேங்கிங்கில் இடம்பிடித்திருந்தனர். ஆனால், வீராங்கனை ஒருவர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று இவ்வாறு நம்பர் ஒன் சாதனையை நிகழ்த்தியிருப்பது இந்தியாவின் சானியா மிர்சாவே. இதுவரை இந்த இரண்டு ஜோடிகளும் விளையாடியுள்ள 14 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளதால் சானியா-ஹிங்கிஸ் ஜோடி ராசியான ஜோடியாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Exit mobile version