உலக டென்னிஸ் இரட்டையர் தர வரிசையில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா முதல்முறையாக 3-வது இடம் பிடித்துள்ளார்.
சானியாவுக்கு 3-வது இடம்
உலக டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது.
இதன்படி இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட் டையர் பிரிவில் மார்டினா ங்கிஸ்சுடன் (சுவிட்சர்லாந்து) இணைந்து சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை சானியா மிர்சா, தர வரிசையில் 3-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.
ஜோகோவிச் முதலிடம்
உலக தர வரிசையில் முதல் முறையாக 3-வது இடத்தை பிடித்து இருப்பதை சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் பகிர்ந்து இருக்கும் சானியா மிர்சா தனக்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பியா வீரர் ஜோகோவிச் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 2-வது இடத்திலும், ரபெல் நடால் (ஸ்பெயின்) 3-வது இடத்திலும், ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 4-வது இடத்திலும், நிஷிகோரி (ஜப்பான்) 5-வது இடத்திலும் உள்ளனர்.
லியாண்டர் பின்னடைவு
இந்திய வீரர்களில் சோம் தேவ் தேவ்வர்மன் 176-வது இடத்தையும், ராம்குமார் ராமநாதன் 10 இடங்கள் முன்னேறி 247-வது இடத்தையும், யுகி பாம்ப்ரி 27 இடங்கள் ஏற்றம் பெற்று 247-வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் லியாண்டர் பெயஸ், ரோகன் போபண்ணா ஆகியோர் சரிவை கண்டு முறையே 25-வது மற்றும் 26-வது இடத்தில் உள்ளனர்.
பெண்கள் ஒற்றையர் பிரி வில் அமெரிக்க வீராங் கனை செரீனா வில்லியம்ஸ் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.