இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக் கொள்ளும் குழுவுக்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்காவும், அதன் கூட்டாளிகளும் எவ்வித சுணக்கமும் காட்டமாட்டார்கள் என அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
ஐ எஸ் அமைப்புக்கு எதிரான கூட்டணி, அவர்களை அழித்து அவர்கள் வசமுள்ள நிலப்பரபபையும் மீட்க உறுதிபூண்டுள்ளது என கோலாம்பூரில் பேசிய ஒபாமா சூளுரைத்தார்.
அவர்களுக்கான நிதி உதவிகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு, தலைவர்கள் தேடி அழிக்கப்படுவார்கள் எனவும் அதிபார் ஒபாமா கூறுகிறார்.
பாரிஸில் நடைபெற்ற தாக்குதல்கள் போன்றவை புதிய இயல்பு நிலை என்று கூறி எவ்வகையிலும் ஏற்க முடியாது எனவும் அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாமல், நாடுகள் தொடர்ந்து தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் எனும் சமிஞ்கையை அனைத்து நாடுகளும் வெளிப்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
ஒரு சிலரின் தீய எண்ணங்களுக்கு உலகம் அடிபணியாது எனவும் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.