ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் ஆரோன் பிஞ்ச் (ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்) காயமடைந்தார். இடது காலில் தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட அவருக்கு நேற்று ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. ‘பாதிப்பு கொஞ்சம் அதிகம் தான். இப்போதைக்கு எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு இருப்பது போல் தெரியவில்லை’ என்று பிஞ்ச் தனது டுவிட்டர் பக்கத்தில் வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்.