பனாஜி:
மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரமாண்ட மாராத்தான் போட்டி கோவாவில் வருகின்ற மே 28-ம் தேதி நடைபெறுகிறது. பெண்களை மையப்படுத்தி நடைபெறும் இந்த மாராத்தான் போட்டியில் சுமார் 2500 பெண்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து நடிகரும், மாடலுமான மிலிந்த் சோமன் கூறுகையில் “உலகம் முழுவதும் அதிகமான பெண்கள் இறப்பதற்கு மார்பக புற்றுநோயும் முக்கிய காரணமாக உள்ளது. இதனால், மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, புற்றுநோய் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள் ஆகியவை குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மாராத்தான் போட்டி நடைபெறுகிறது” என்றார்.
3 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் என 3 பிரிவுகளில் இந்த மாராத்தான் போட்டி நடைபெறவுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.