ஒரு கோழிப்பண்ணை முதலாளியை பேட்டி எடுக்க வந்திருந்தார்கள்.
உங்கள் கோழிகள் எல்லாம் கொழு கொழுவென்று இருக்கிறதே? அதற்குக் காரணம் என்ன என்று கேட்டனர்.. பண்ணைக்காரர், அதெல்லாம் ஒன்னுமில்லீங்க, நான் அவைகளுக்கு, பாதாம், பிஸ்தா எல்லாம் கொடுக்குறேன், அதனாலத்தான் இப்படி இருக்கு என்றார்.
வந்தவர்கள், அதைக் கேள்விப்பட்டுத்தான் நாங்கள் இங்கே வந்தோம்.
நான்கள் எல்லாம் வருமானத்துறை அதிகாரிகள், எடு கணக்கு நோட்டை என்று சொல்லி 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர்..
பண்ணைக்காரர், தலையில் கையைவைத்துக் கொண்டு வருத்தமாக இரண்டு நாள் சாப்பிடவில்லை.
ஒருவாரம் கழித்து, ஒரு கும்பல் வேனில் வந்திறங்கியது. உங்கள் கோழிக்கெல்லாம் என்ன தீனி போடுகிறீர்கள் என்று கேட்டனர். பண்ணைக்காரர் சுதாரித்துக் கொண்டு, இந்தமுறை வந்தவர்கள் மூக்கை அறுக்கிறமாதிரி ஏதாவது பதில் சொல்லனும்னு, நான் ஒன்றுமே போடுவதில்லை என்றார்.
வந்தவர்கள் நாங்கள் ஜீவ காருண்ய சங்கத்திலிருந்து வந்துள்ளோம்.. நீங்கள் கோழிகளை பட்டினி போட்டதற்காக உங்களுக்கு ரூபாய் 50,000 அபராதம் என்று பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, ரசீது கொடுத்தனர்.
பண்ணையார் நிலைமை கேட்கணுமா?
என்னடாயிது, எதைச் சொன்னாலும் பணம் பிடுங்குரானுங்க… என்றிருந்த நிலையில்… மூன்றாவது அணி ஒன்று வந்து, அதே போல உங்கள் கோழிகளுக்கு என்ன சாப்பாடு போடுறீங்க என்றனர்.
பண்ணையார் பாதி பயத்துடன், அதுங்க கிட்ட ஆளுக்கு ஒருஅனா கொடுத்துடுறேன்.அதுங்க எதையோ வாங்கித்தின்னுட்டு வந்திடுது.. என்னா திங்குதுனு எனக்குத் தெறியாது என்று சொல்லி ஒருவழியாக தப்பித்தார்…