ரொம்ப சென்டிசிடிவ் தோல் உள்ள சிலருக்கு, மழைக் காலத்திலும் குளிர் காலத்திலும் வெண்டைக்காய் அலர்ஜியாகிவிடும். உடம்பு முழுக்க அரிப்பை ஏற்படுத்தும். இப்படியொரு பிரச்னை இருந்தால் இந்த குளிர்காலத்தில் வெண்டைக்காயை தவிர்த்துவிடுங்கள்.
சிலருக்கு குளிர்காலத்தில் முந்திரிப்பருப்புகூட உடம்புக்கு சேராது. அதனால, முந்திரிப்பருப்பை சேர்த்து செய்கிற உணவுப் பொருட்களை தவிர்ப்பது நலம்.
இன்னும் சிலருக்கு என்ன அலர்ஜி என்றே தெரியாமல் உடம்பு முழுக்க அரிப்பாகி அவதிப்படுவார்கள். அவர்கள் பட்டை தீட்டாத கைக்குத்தல் அரிசியை குளிர்காலம் முடியும்வரை பயன்படுத்தலாம்.
பனிக்காலத்தில் தோலில் வெள்ளை படர்ந்து அரிப்பை ஏற்படுத்தும். இதற்கு எளிய தீர்வு சுத்தமான தேங்காய் எண்ணெய், (பாட்டில்களில் வரும் வாசனை சேர்த்த தேங்காய் எண்ணெய் அல்ல) தடவினால் போதும். கிடைக்காதவர்கள் அதிக கெமிக்கல்கள் கலக்காத வாசலின் தடவலாம்.