பாதத்தில் ஏன் வெடிப்புகள் ஏற்படுகின்றன?
பாதத்தில் போதுமான ஈரப்பசை இல்லாதபோது வெடிப்புகள் ஏற்படுகின்றன. இவற்றை ‘ட்ரொமாட்டிக் ஃபிஷர்ஸ்’ ( traumatic fissures ) என்று குறிப்பிடுவோம். பித்தவெடிப்பு இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் வருகிற ஒன்றுதான்.
என்ன சிகிச்சை?
பித்தவெடிப்பு இருப்பவர்கள், தண்ணீரை கை பொறுக்கும் அளவுக்கு சுட வைத்து, அதில் சிறிது நேரம் காலை வைத்து எடுத்தால், பாதங்கள் மிருது வாகும். கூடவே, வெடிப்பின் மூலமாக தேவையான நீர் உறிஞ்சப்பட்டு விடும். பாதத்தில் உள்ள அழுக்குகளும் வெளியேறிவிடும். இதை தினமும் செய்யலாம்.
பித்தவெடிப்பிலிருந்து ரத்தம் வந்தால், உடனடியாக தோல் மருத்துவரிடம் போய் சிகிச்சை பெறுவது அவசியம்.
பித்தவெடிப்பு வராமல் இருக்க!
இரவில் படுக்கும்முன் கால்களை நன்றாகக் கழுவி, பாதங்களை மிருதுவான துண்டால் ஒத்தியெடுத்து (அழுந்த துடைக்க வேண்டாம்), சிறிதளவு எண்ணெயோ அல்லது வாசலினோ அதில் தடவலாம். இப்படிச் செய்வதால், பாதங்களுக்கு தேவையான ஈரப்பசை கிடைத்து விடும். பாதமும் பட்டுபோல மாறும்