முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசை சீபம் என்ற திரவத்தால் உண்டாகிறது. இந்த சீபம் நம்முடைய தோலை கொசுக்களிடமிருந்தும் பூஞ்சைக் காளானிடமிருந்தும் பாதுகாக்கக்கூடியது. தோலை ஈரமாகவும் வைத்துக் கொள்ளும். அதனால் முகத்தில் அல்லது தோலில் எண்ணெய் பசை உள்ளதை பெரிய குறையாக கருத வேண்டாம்.
அதிக எண்ணெய் பசை இருந்தால் அடிக்கடி குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். இது ஒன்றே போதுமானது. எண்ணெய் பசையை முழுவதுமாக அகற்ற விரும்பினால் தோல் வறட்சி, பூஞ்சைகளால் நோய் தொற்று ஏற்படும்.