Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

வாழ்க்கையின் ரகசியம் என்ன ?

பெரியவர்களின் உலகத்துக்கும் குழந்தைகளின் உலகத்துக்கும் என்ன வித்தியாசம்?”
‘சீனக் கதை இது. ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், ‘அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’
அம்மா சொன்னாள், ‘எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!’
அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, ஆசிரியை ‘நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன.
ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் ‘நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’ என்றான்.
ஆசிரியை கோபமாக, ‘உனக்குக் கேள்வி புரியவில்லை’ என்றார்.
சிறுவனோ, ‘டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை’ என்றான்!”

Exit mobile version