Technology

24-மெகாபிக்சல் மற்றும் 4K வீடியோவுடன் கூடிய மிரர்லஸ் (Mirrrorless) கேமரா அறிமுகம்:

24-மெகாபிக்சல் மற்றும் 4K வீடியோவுடன் கூடிய மிரர்லஸ் (Mirrrorless) கேமரா அறிமுகம்

Fujifilm  என்ற காமிரா  தயாரிக்கும் நிறுவனம்  இறுதியாக இரண்டு வருடத்திற்கு முன்னர்  X-T1 தர காமிராவினை அறிமுகப்படுத்தியதினை  தொடர்ந்து X-T2 ரக காமிராவினை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை முற்றிலுமாக கண்ணாடி இல்லாத மற்றும் மாற்றிக்கொள்ளும் லென்சுகளையும் கொண்டது. 4K வீடியோ பதிவு  மற்றும் கூடுதல்  ஆட்டோ ஃபோகஸ் புள்ளிகளை கொண்டது. X-T2 ரக காமிரா செப்டம்பர் மாதம்  விற்பனைக்கு அறிமுகப்படுத்தவுள்ளனர். இதன் விலைதோராயமாக  ரூ.1,07,700 ( $1,599.95 ) என அறிவித்துள்ளனர்.மேலும் அதே சமயத்தில்   ரூ. 33,650  மதிப்பு கொண்ட EF-X500 ரக காமிராவினையும் அறிமுகப்படுத்த உள்ளனர்.

  X-T2 ரக  காமிராவின்  சிறப்பம்சம்:
      ரீசொலுசன்:  2.36 மில்லியன் புள்ளிகள்
    குவிய புள்ளிகள் :60fps
     குவிய தூரம்: 0.06 s
      ISO தரம்: 200-6400
    சட்டர்  ஸ்பீடு :1/8000 s