Technology

உங்கள் மாத பட்ஜெட்டை சிக்கனப்படுத்த உதவும் மொபைல் செயலிகள்!

இந்த செயலிகளை உங்களது ஸ்மார்ட்ஃபோனில் பதிவிறக்கம் செய்துகொண்டால், பணத்தை மிச்சப்படுத்த முடியும்.

நம்மில் பலரும் அதிக பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறோம். ஆனால், சம்பாதித்த பணத்தை, செலவு செய்ய நாம் என்ன செய்ய வேண்டும். நமக்கு யாரேனும் அதுபற்றி அவ்வப்போது எச்சரிக்கை செய்தால், மிக உதவிகரமாக இருக்கும்

அத்தகைய எச்சரிக்கை தரும் அப்ளிகேஷன்ஸ் அல்லது செயலிகளை உங்களது ஸ்மார்ட்ஃபோனில் பயன்படுத்தினால், நிறைய பணம் மிச்சப்படும். குறிப்பாக, ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களுக்கு நிதி ஆலோசகரைப் போல செயல்படும் அந்த செயலிகளை பற்றி இங்கே பார்க்கலாம்.

வால்நட் (Walnut): இந்த செயலி, உங்களுடைய மாத செலவுகள், கட்ட வேண்டிய பில்கள் ஆகியவற்றை சரியான தேதிக்குள் உங்களுக்கு ஞாபகப்படுத்தும். உங்களுக்கு வங்கிகளில் இருந்து மற்றும் பிறவற்றில் இருந்து வரும் மெசேஜ்களிடம் இருந்து உங்கள் பில், டிக்கெட்டுகள் மற்றூம் முக்கிய செலவினங்கள் ஆகியவற்றை ஆய்ந்து நீங்கள் செய்யும் செலவுகள், வரவுகள் ஆகியவற்றை உங்களுக்கு ஒரு மினி அறிக்கையாக கொடுக்கும். இது மட்டும் இல்லீங்க, இந்த தகவல்களை உங்களது நண்பர்களுடன் சமூக வலைதளங்கள் வாயிலாக பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

மணிஃபை (Monefy): இந்த ஆப் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் செலவினங்களை ஒரே கிளிக்கில் எளிதாகக் கண்காணிக்கலாம்; இது புதிய செயலி உங்களுடைய செலவினங்களை மிக விரைவாக சேர்க்க அனுமதிக்கிறது.

இந்த பதிவுகளை புதியதாகஉருவாக்கவோ அல்லது ஏற்கனவே உள்ள பதிவுகளை டெலிட் செய்யவோ முடியும். மேலும், இதில் உள்ள தகவல்களை இன்னொரு மொபைலுக்கு மாற்றவும் செய்யலாம்.
மணி வியூ (Money View): இந்த செயலி உங்களுக்கு மாத பட்ஜெட்டை போல வரவு எவ்வளவு? செலவு எவ்வளவு? என்பதை மதிப்பிட்டு முன்மாதிரி கொடுக்கும். இது, உங்களுடைய வங்கிக் கணக்கு எண்களின் கடைசி நான்கு எண்களை மட்டுமே எடுத்து கொண்டு, எஸ்.எம்.எஸ் தகவல்களின்படி உங்களுடைய மாத பட்ஜெட்டை கொடுக்கும்.

மோ-பில்ஸ் (Mobills): இந்த ஆப், உங்களுடைய பட்ஜெட் திட்டம் மற்றும் பில்கட்ட வேண்டிய தேதியை நினைவுபடுத்துதல் என இரண்டையும் ஒரே க்ளிக்கில் உங்களுக்கு அளிக்கும். உங்களுடைய வரவு, செலவு டேட்டாக்களை மிக எளிதில் கையாண்டு தகவல் தரும்.

மணி லவ்வர் (Money Lover): உங்களுடைய அனைத்து செலவுகளையும் சரியாகக் கண்காணிக்கும் ஆப்ஸ்களில் இதுவும் ஒன்று. ஒருசில நொடிகளில் உங்களுடைய தினசரி வரவுசெலவும், பரிவர்த்தனைகளை வகைப்படுத்தி, மாத பட்ஜெட்டை வடிவமைத்துத் தருகிறது.