Technology

சியோமி Mi 6 டீசர் வெளியானது: முழு தகவல்கள்

பீஜிங்:
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi 6 ஸ்மார்ட்போன் வெளியீடு ஒருவழியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. Mi 6 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 19-ந்தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என சமீபத்தில் சியோமி வெளியிட்டுள்ள டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஜிங் நகரின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடக்கவுள்ள அறிமுக விழாவில் புதிய சியோமி சாதனம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எனினும், இதன் விலை மற்றும் விநியோகம் சார்ந்த தகவல்கள் தொடர்ந்து மர்மமாகவே உள்ளது.
சீன மொழியில் வடிவமைக்கப்பட்டுள்ள Mi6 டீசரை மொழி மாற்றம் செய்த போது, “நீங்கள் 203 நாட்கள் காத்திருந்தீர்கள், நாங்கள் ஏழு ஆண்டுகளாக காத்திருந்தோம்”, என குறிப்பிடப்பட்டுள்ளது.  இதுதவிர டீசரில் எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.
இதுவரை வெளியாகியிருக்கும் தகவல்களில் புதிய சியோமி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட், 4ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் மெமரி, 4ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டெர்னல் மெமரியும், இவற்றின் விலை முறையே CNY 2,199 அதாவது இந்திய மதிப்பில் ரூ.20,500 மற்றும் CNY 2,599 அதாவது இந்திய மதிப்பில் ரூ.24,300 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சியோமி Mi 6 ஸ்மார்ட்போன் தவிர Mi6 பிளஸ் ஸ்மாரட்போனும் வெளியிடப்படும் என்றும் இதில் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் + 256 ஜிபி ரேம் கொண்ட மாடல்கள் முறையே CNY 2,699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.25,000, CNY 3,099 அதாவது இந்திய மதிப்பில் ரூ.28,990, CNY 3,699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.34,600 வரை நிர்ணய்ம செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும் புதிய Mi 6 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம், 12 எம்பி பிரைமரி கேமரா, 4K வீடியோ பதிவு செய்யும் வசதி, 8 எம்பி செல்ஃபி கேமரா, 4K வீடியோ பதிவு செய்யு்ம வசதி வழங்கப்படலாம். இத்துடன் Mi6 ஸ்மார்ட்போனில் குவாட் எச்டி 2K OLED டிஸ்ப்ளே, டூயல் பிரைமரி கேமரா அமைப்பு, குவால்காம் நிறுவனத்தின் குவிக் சார்ஜ் 4.0 தொழில்நுட்பம் மற்றும் 4000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.