Site icon OneTune | ஓர்ராகம் | Short Stories | Magazine | News

கீக்பென்ச் டெஸ்டிங்: மோட்டோ E4 சிறப்பம்சங்கள் கசிந்தது

சான்பிரான்சிஸ்கோ:
லெனோவோவின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மாடலான மோட்டோ E4 தயாரிக்கப்பட்டு வருது FCC  (ஃபெடரெல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன்) மூலம் உறுதி செய்யப்பட்டது. மோட்டோ E3 பவர் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இது தயாராகி வருவதாக கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் புதிய பட்ஜெட் ரக மோட்டோ ஸ்மார்ட்போன் கீக்பென்ச் செயல்திறன் வழங்கும் தளத்தில் காணப்பட்டுள்ளது. அதன்படி இந்த தளத்தில் மோட்டோ  E4 ஸ்மார்ட்போன் முறையே 551 மற்றும் 1514 புள்ளிகளை பெற்றுள்ளது. இவை சிங்கிள் கோர் மற்றும் மல்டி-கோர் சோதனைகளை தொடர்ந்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
துவக்க நிலை பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு இத்தகைய புள்ளிகள் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று தான் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். கீக்பென்ச் தளத்தில் மோட்டோ E4 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது.
அதன்படி மோட்டோ E4 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம், 1.25 ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் MT6737 குவாட்கோர் சிப்செட் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 16ஜிபி இன்டெர்னல் மெமரி, வை-பை, ப்ளூடூத் போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் 2800 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. டிஸ்ப்ளே அளவு, ரெசல்யூஷன் மற்றும் கேமரா அம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாகவில்லை.
முன்னதாக வெளியான தகவல்களில் மோட்டோ E சீரிசில் இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் என்றும், ஒன்று மோட்டோ E4 என்றும் மற்றொன்று மோட்டோ E4 பிளஸ் என அழைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. சிறப்பம்சங்களை பொருத்த வரை மோட்டோ E4 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் டிஸ்ப்ளேவும், மோட்டோ E4 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி திரை மற்றும் மீடியாடெக் சிபிசெட்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்துடன் டூயல் சிம் கனெக்டிவிட்டி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத், வை-பை மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மோட்டோ E4 மாடலில் 2800 எம்ஏஎச் பேட்டரியும், E4 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
மோட்டோ E4 பிளஸ் ஸ்மார்ட்போனில் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, பிராக்சிமிட்டி சென்சார் மற்றும் கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் வட்ட வடிவிலான கேமரா மாட்யூல், மற்றும் மோட்டோ லோகோ போனின் நடுவே பொருத்தப்பட்டுள்ளது.
Exit mobile version