புதுடெல்லி:
சர்வதேச ஆன்லைன் வர்த்தக தளமான அமேசான் இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்று மாலை நிறைவு பெறும் தள்ளுபடி விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களும் குறைக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2,500 வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. அதன் படி சாம்சங் கேலக்ஸி ஆன்8, மோட்டோ ஜி4 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விலை முறையே ரூ.12,990 மற்றும் ரூ.11,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதே போன்று மோட்டோ எக்ஸ் போர்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.26,999 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது, இது ரூ.34,999 விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமின்றி பல்வேறு இதர மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கும், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. ஆண்ட்ராய்டு போன்களை போன்றே ஐஓஎஸ் போன்களுக்கும் சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றது.
அந்த வகையில் ஆப்பிள் ஐபோன் 7 ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 பிளஸ் 128 ஜிபி ரூ.82,000-இல் இருந்து 10,000 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.71,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றது. இதே போல் 32 ஜிபி பிளாக் மாடல் வாங்கும் போதும் ரூ,.10,000 குறைக்கப்பட்டு ரூ.61,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
பழைய ஐபோன் மாடல்கள் மற்றும் சாம்சங், ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் இவற்றின் தள்ளுபடி விலை ஒவ்வொரு மாடலுக்கும் மாறுபடுகிறது.
ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ப்ளூடூத் ஹெட்செட், பேக் கவர், டெம்ர்டு கிளாஸ் உள்ளிட்ட சாதனங்களின் விலையும் குறைக்கப்பட்டு சிறப்பு தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றது. நேற்று துவங்கிய அமேசான் சிறப்பு விற்பனை இன்றுடன் (மார்ச் 30-ந்தேதி) நிறைவு பெறுகிறது.