சென்னை: மனிதர்கள் எத்தனை ஆண்டுகள் உயிர் வாழப் போகிறார்கள் என்பதை, அறிவியலின் மூலம் துல்லியமாக அறிந்து கொள்ளலாம்.
ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளனர். அதன் மூலம் மனிதர்களின் ஆயுளை கணக்கிட முடியும் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர். இந்த முறையின் மூலம் முதலில் உடல் உறுப்புகளை சிடி ஸ்கேன் மூலம் ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ளும். பின்னர் அந்த புகைப்படங்களை ஆராய்ந்து, ஒருவர் எத்தனை ஆண்டுகள் உயிர்வாழ முடியும் என்று கூறிவிடும். முன்னதாக இந்த செயற்கை நுண்ணறிவு முறையை 48 பேர் மீது பரிசோதித்து பார்த்தனர்.
அதில் 69% துல்லியமாக நடைபெற்றுள்ளது. இதன்மூலம் வருங்காலத்தில் மனித உடலில் நடைபெறும் மாற்றங்களை கண்டறிந்து, அதனை தொடக்கத்திலேயே சரிசெய்து விட முடியும் என்று நம்பப்படுகிறது. மேலும் நோய்களையும் முன்னரே கண்டறிந்து, சிகிச்சை அளிக்க முடியும். விரைவில் மருத்துவ உலகில் பயன்பாட்டிற்கு வரும் என்றும், மனிதர்களுக்கு நன்மை பயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.